Published:Updated:

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாற்றத்திற்கான விதையைத் தூவியிருக்கிறார்கள் - பாராட்டும் தொழிற்சங்கம்

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாற்றத்திற்கான விதையைத் தூவியிருக்கிறார்கள் - பாராட்டும் தொழிற்சங்கம்
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாற்றத்திற்கான விதையைத் தூவியிருக்கிறார்கள் - பாராட்டும் தொழிற்சங்கம்

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாற்றத்திற்கான விதையைத் தூவியிருக்கிறார்கள் - பாராட்டும் தொழிற்சங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``முன்னணி நடிகர்கள் நடித்து அவர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களது ரசிகர்கள் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தைச் செய்து வருவதை நாம் அனைவரும் நன்கறிந்த விசயமாகும். இந்நிலையில், அதை தவிர்த்துட்டு, தான் தயாரித்த கனா பட ரிலீஸான தியேட்டரில் மரக்கன்று கொடுத்த சிவகார்த்தியனுக்கு நன்றி" என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

' 'நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும், ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திட முன் வைக்க வேண்டும்' என்கிற கோரிக்கையை ரஜினி தொடங்கி விஜய் வரை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து முன்வைத்து வருகிறது. ஆனால், அதற்கான ஒத்துழைப்பை பெரும்பாலான முன்னணி  நடிகர்களும் செய்யத் தயாராக இல்லை. இந்தச் சூழ்நிலையில், முன்னணி நடிகராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகி அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கனா. இந்தத் திரைப்படம் வெளியானபோது, திருநெல்வேலியில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க வந்த பொதுமக்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நெல்.ஜெயராமன் அவர்களின் நினைவாக சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மரக்கன்றுகளை வழங்கி மாபெரும் மாற்றத்திற்கான விதையை விதைத்திருக்கின்றனர்' என்று அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


 

இதுசம்பந்தமாக, நம்மிடம் பேசிய அந்தச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, ``நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து விட்டில் பூச்சிகளாக உலா வரும் ரசிகர்களுக்கு மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் தமிழகத்தில் மாற்றத்திற்கான விதையைத் தூவி நல்லதொரு முயற்சியை முன்னெடுத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களின் இந்த நல்ல முயற்சியை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதார வரவேற்கிறது.

மேலும், `மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதை போல மாற்றத்திற்கான பயணம் இத்துடன் நின்றுவிடாமல் வரும் காலங்களில் தங்களின் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் அத்திரையரங்க வளாகங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளோடு இணைந்து  ரத்ததான முகாம்களையும், கண்தானம், உடல் உறுப்பு தானம், மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புஉணர்வு முகாம்களையும் அவர் நடத்தினால் நன்றாக இருக்கும். கூடவே, சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் உயிர்க்கவசமான தலைக்கவசம், மண் வளத்திற்கும், இயற்கைகும் எதிரியாக இருக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு குறித்த விழிப்புஉணர்வு முகாம்களையும் நடத்திட ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை பணிக்குமாறு நடிகர் சிவகார்த்திகேயன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். அணு ஆயுதங்கள் எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிறதோ, அது போல ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை நம் தேசத்திற்கும், நாம் வாழ்கின்ற இச்சமுதாயத்திற்கும் ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திட பயன்படுத்தி வளரும் தலைமுறைக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். அதற்கான, முன்முயற்சி அவரிடம் தெரிகிறது. முன்னணி நடிகர்கள் பலரிடம் இல்லாத சமூக அக்கறை சிவகார்த்திக்கேயனிடம் இருக்கிறது" என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு