வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (27/12/2018)

கடைசி தொடர்பு:12:00 (27/12/2018)

ரஷ்யாவில் முதன்முறையாக வெளியாகும் அஜித் படம்!

அஜித் நடிப்பில் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் `விஸ்வாசம்' திரைப்படம், ரஷ்யாவில் திரையிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம்


`வீரம்’, `வேதாளம்', `விவேகம்' படங்களைத் தொடர்ந்து, அஜித் - சிவா காம்போவில் உருவாகிவரும் நான்காவது படம், `விஸ்வாசம்'. இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 'பில்லா', 'ஆரம்பம்' படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித்துடன் இணைந்துள்ளார் நயன்தாரா. அஜித் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார், டி.இமான். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், கிராமத்து வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  ஒளிப்பதிவை வெற்றியும், எடிட்டிங்கை ரூபனும் செய்திருக்கிறார்கள்.

விஸ்வாசம்

தம்பி ராமையா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாள்களுக்குப் பின், அஜித் படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். படத்தை பல்வேறு நாடுகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவுசெய்துள்ளனர். அந்த வகையில், ரஷ்யாவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 'சர்கார்', '2.O' உள்ளிட்ட திரைப்படங்கள் ரஷ்யாவில் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

ஆனால், இதுவரை நடிகர் அஜித்தின் திரைப்படம் ரஷ்யாவில் வெளியாகாத நிலையில், முதன்முறையாக `விஸ்வாசம்' ரிலீஸ் ஆகிறது. ரஷ்யாவில் உள்ள 8 நகரங்களில் படத்தை வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்படம் இத்தனை நகரங்களில் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை. படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், படம் வெளியாகும் நகரங்களின் எண்ணிக்கை கூடுதலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.