`அவர் அழுத அழுகை இப்பவும் கண்ணுலேயே நிக்குது!' - சில்வியா சாண்டி நெகிழ்ச்சி | sandy master wife sylviya talks about her personal

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (27/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (27/12/2018)

`அவர் அழுத அழுகை இப்பவும் கண்ணுலேயே நிக்குது!' - சில்வியா சாண்டி நெகிழ்ச்சி

ப்போதும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியை நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவருடைய நடனத்துக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. எப்போதும் பிஸியாக சுற்றிக் கொண்டிருப்பவர் அவருடைய மகளின் புன்னகைக்கு மட்டுமே கட்டுப்பட்டு இருக்கிறாராம். அப்பா - மகள் இருவருக்குமிடையே உள்ள சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி சாண்டி மாஸ்டரின் மனைவி சில்வியா நம்மிடையே பகிர்ந்தார்.

சாண்டி

``நான் மாசமா இருந்தப்போ என் மேல ரொம்ப கேரிங்கா இருந்தார். எல்லோரும் 'குட்டி சாண்டி' பிறக்கப் போறான்னு சொல்லிட்டே இருந்தாங்க. இவருக்கும் ஆரம்பத்துல பையனா இருந்தா நல்லா இருக்குங்குற எண்ணம் இருந்துச்சு. கொஞ்ச நாளில் அவரே எந்தக் குழந்தைன்னாலும் பிரவாயில்லம்மான்னு சொல்ல ஆரம்பிச்சார். ஒன்பதாவது மாசத்தில் எனக்கு வலி வர்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம். பாப்பா வயிற்றுக்குள்ள இருந்து நகர்ந்து கீழ் நோக்கி வர்றப்ப எல்லாம் எனக்கு பயங்கரமா மூச்சு திணற ஆரம்பிக்கும். நான் கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு நடக்க நடக்க, அவர் பயந்து போயிட்டார். ஒருகட்டத்துக்கு மேல இதையெல்லாம் பார்த்து அவர் பயந்து போய் என்னை மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிட்டார். அங்கே போனதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சது பாப்பாவுக்கு ஹார்ட் பீட் அதிகமா இருக்குன்னு.

குழந்தையுடன் சாண்டி

ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஸ்கேன் பண்ணி பார்த்துட்டே இருந்தாங்க. நான் ஆப்ரேஷன் ரூமுக்குள்ளே போறப்போ அவர் ரொம்ப அழுதுட்டார். குழந்தை பிறந்ததும் தன் கைல குழந்தையை வாங்கிட்டு அவர் அழுத அழுகை இப்பவும் கண்ணுலேயே நிக்குது. எங்க பாப்பா பெயர் சுசானா மிச்சில் ( Suzzannah Michelle). பாப்பாவுக்கு ஒரு மாசம் இருக்கும்போது ரொம்ப அழுதுட்டே இருந்தா. சமாதானமே ஆகலை. அவர் தூக்குனதும் அமைதியாகிட்டா. அப்பா, பொண்ணு பாசம் அதிகமாகவே இருக்கும். பெண் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் உண்மையை சொல்லணும்னா அவருக்கு பொறுப்பு அதிகமாகியிருக்கு. பொதுவாகவே அப்பா, பொண்ணு உறவு ஸ்ட்ராங்கா தான் இருக்கும். ஆனா, இங்கே அது கொஞ்சம் ஓவராகவே இருக்குங்க. அவ அப்பா பொண்ணு'' எனப் புன்னகைக்கிறார், சில்வியா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க