வெளியிடப்பட்ட நேரம்: 10:34 (28/12/2018)

கடைசி தொடர்பு:10:37 (28/12/2018)

`தரமான சம்பவத்த இனிமேதான் பாக்கப் போற...' - மாஸ் காட்டும் ரஜினியின் `பேட்ட' டிரெய்லர்!

ரஜினிகாந்தின் `பேட்ட' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

`எந்திரன்' படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துவரும் புதிய படம், `பேட்ட'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் எனப் பலர் நடிக்கின்றனர். சிம்லா, டார்ஜிலிங், உத்தரப்பிரதேசம் என வட மாநிலங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டுவந்தது. படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்துவருகின்றன.

பொங்கலுக்கு படம் ரிலீஸாக உள்ள நிலையில், பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தது. இதற்கிடையே, படத்தின் டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே தற்போது 'பேட்ட' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் காட்சிகள், பின்னணி இசை என டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க