‘சர்கார்’ கதைப் பிரச்னை சுமூகமாக முடிந்தது என்று நினைத்த சூழலில் வருணுக்கு ஆதரவாக நின்ற பாக்யராஜ் திடீரென தனது ‘திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர்’ பதவியை ராஜினாமா செய்திருப்பது தமிழ் திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ராஜினாமாவை ஏற்கவில்லை’ என்று சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ்குமார், பாக்யராஜுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனாலும் பாக்யராஜ் இந்த நிமிடம்வரை தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. என்னதான் நடக்கிறது?

ஆரம்பத்தில் பாக்யராஜ் இந்தப் பிரச்னையைக் கையாண்டபோது, சிலபல அசௌகரியங்களைச் சந்திக்க நேரிட்டிருக்கிறது. அதையும்தாண்டி நியாயத்தின் பக்கம் நின்றார் பாக்யராஜ். இதனால் உதவி இயக்குநருக்கு நியாயமும் கிடைத்தது. இந்தச் சூழலில் இப்படி ஒரு ராஜினாமா முடிவை எடுத்திருக்கிறார் பாக்யராஜ். அதேசமயம், ‘பாக்யராஜின் ராஜினாமா முடிவுக்குக் காரணம், திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உள்ளேயே நிலவி வரும் பாலிடிக்ஸ்தான்’ என்று சில தகவல்கள் கசிய... சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் இயக்குநருமான பேரரசுவிடம் பேசினோம்.

“விஜய்யை வச்சு திருப்பாச்சி, சிவகாசினு படம் எடுத்தவன் நான். அவருக்கு இன்னொரு கதை ரெடி பண்ணிட்டு அவரைச் சந்திக்கக் காத்திருக்கேன். இந்த நேரத்துல இப்படியொரு பிரச்னை எனக்கே சங்கடமாதான் இருந்துச்சு. ஆனாலும், சங்கத்தின் தலைவராக பாக்யராஜ் எடுத்த முடிவில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தவிர, இதுவிஷயமாக சங்கப் பொறுப்புல இருக்கிற ஒவ்வொருத்தரோட கருத்தையும் எழுதித்தரச் சொல்லி பாக்யராஜ் கேட்டார். அப்போது ‘ரெண்டு கதையின் சாராம்சமும் ஒண்ணாத்தான் இருக்கு. ‘சர்கார்’ வெளிவந்தால், அதுக்குப் பிறகு வருண் இந்தக் கதையைப் படம் பண்ண முடியாது’ என்று என் கருத்தைப் பதிவு செஞ்சேன். எல்லாம் நல்லவிதமா முடிஞ்சபிறகும் அவர் தன் பதவியை ராஜினாமா பண்ணினது எனக்கே அதிர்ச்சிதான். அதேசமயம் நடிகர் விஜய்யோ அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனமோ எந்தத் தலையீடும் செய்யலை. ஆனால், ‘சங்கத்துக்குள் எதிர்பார்க்காத சில விஷயங்கள் நடந்திடுச்சு’னு நெருங்கின சிலர்கிட்ட பாக்யராஜ் சார் வருத்தப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.

எனக்குத் தெரிஞ்சவரை, சங்க அலுவலகத்துக்குள் பேசிய சில விஷயங்கள் ஏ.ஆர்.முருகதாஸ் காதுக்கு உடனுக்குடன் போனதாலதான் பாக்யராஜ் அதிருப்தி அடைஞ்சிருக்கார். இந்தப் பிரச்னையில யாரெல்லாம் தனக்கு ஆதரவாகவும் எதிராகவும் இருந்தார்கள் என்று அந்தப் பெயர்களை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். அதுதான் பாக்யராஜை ரொம்பவே வருத்தப்பட வெச்சிடுச்சி. ‘எனக்கும் முருகதாஸுக்கும் என்னங்க பிரச்னை? சங்கத்துல ஒரு பிரச்னைனு தலையிட்டா, சங்கம் ஆதரவாக நிக்குமா, இப்படி குப்புறத் தள்ளுமா?’னு என்கிட்டயே பாக்யராஜ் கேட்டார்” என்கிறார் பேரரசு.

இது குறித்துச் சங்கத்தின் துணைத் தலைவரான ஆர்.கே.செல்வமணியிடம் பேசியபோது, “சங்கத்தில் பிரச்னைகள் எதுவும் இல்லை. அப்படி இருப்பதாக நினைத்தால் பாக்யராஜ்தான் அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்” என்கிறார்.

வருண் ராஜேந்திரனிடம் பேசியபோது, “ ‘சர்கார்’ படம் பற்றி இதுக்குமேல சர்ச்சைகள் கிளம்பறதுல எனக்கு விருப்பமில்லை. என் கதைக்காக நான் போராடினேன். பாக்யராஜ் சார் சங்கத்தின் தலைவராக நியாயத்தின் பக்கம் நின்றார். நானே முதல்ல ‘விஜய் படம்கிறதால இவர் நமக்கு ஆதரவாக நிற்பாரா’னு யோசிச்சேன். ஆனால், சங்கத்தின் வரலாற்றில் முதல்முறையாக ஒரு உதவி இயக்குநருக்கு ஆதரவு கடிதமே தந்தார். சங்கத்துல நானும் உறுப்பினர். ஏ.ஆர்.முருகதாஸும் உறுப்பினர். அதனால சங்கத்துக்குள் நடந்த விஷயங்களைப் பற்றி இதுக்குமேல் வேற எதுவும் நான் பேச விரும்பலை. பிரச்னை வளர்வதில் எனக்கு விருப்பம் இல்லை” என்றார்.

இன்னொன்றையும் சிலர் சொல்கிறார்கள். “கதைப் பிரச்னை சங்கத்துக்கு வந்தபோது அதைச் செயற்குழுவில் வைத்து அனைவரின் கருத்தையும் பாக்யராஜ் கேட்டிருக்கிறார். அப்போது சங்க பொறுப்பாளர்கள் சிலர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவாகப் பேசியது மட்டுமில்லாமல், ‘சின்ன வீடு’ கதைகூட தழுவல்தானே என்று எக்குத்தப்பாகக் கேட்டிருக்கிறார்கள். அதே உதாரணத்தை ஏ.ஆர்.முருகதாஸும் தனது பேட்டியில் குறிப்பிட்டார். இவை எல்லாம் பாக்யராஜ் மனதை நிறையவே காயப்படுத்திவிட்டன. அதனால், இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்” என்றார்கள். பாக்யராஜிடம் பேசினோம். “இப்போதைக்கு இந்த விஷயம் தொடர்பாக எதுவும் பேசுகிற மனநிலையில் நான் இல்லை. சில நாள்கள் போகட்டும், பார்க்கலாம்” என்றார்.

- ம.அய்யனார் ராஜன்