நடிகர் மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்கை முடக்கிய ஜி.எஸ்.டி துறை! | actor mahesh babu bank accounts seized by gst department

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (28/12/2018)

கடைசி தொடர்பு:14:47 (28/12/2018)

நடிகர் மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்கை முடக்கிய ஜி.எஸ்.டி துறை!

`சேவை வரி செலுத்தவில்லை' என்ற காரணத்துக்காக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்கை ஜி.எஸ்.டி துறை முடக்கியுள்ளது. 

மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார், ரசிகர்களின் ஃபேவரைட் நாயகன், பிரின்ஸ் என அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் தெலுங்கில் இருக்கும் நடிகர்களில் முதன்மையானவர் என்பது மட்டுமில்லாமல் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவர் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய `ஸ்பைடர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, மகேஷ் பாபு சேவை வரி செலுத்தவில்லை எனக் கூறி ஜி.எஸ்.டி துறை அவரது வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.

மகேஷ் பாபு

இது தொடர்பாக ஹைதராபாத் ஜி.எஸ்.டி துறை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``கடந்த 2007- 08-ம் ஆண்டுக்கான சேவை வரியை மகேஷ் பாபு செலுத்தவில்லை. பிராண்ட் அம்பாஸிடராக இருந்து விளம்பரங்களில் தோன்றியது உள்ளிட்டவற்றுக்காக இந்தச் சேவை வரி விதிக்கப்பட்டது. அவர் கட்டாத மொத்த நிலுவைத் தொகை ரூ.18.5 லட்சம் இருக்கிறது. இதற்காக நேற்று ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ ஆகிய வங்கிகளில் உள்ள அவரது வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.73.5 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. இது மொத்த வரி, வட்டி மற்றும் அதற்கான அபராதத் தொகை ஆகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபு

இந்த நிலையில், ஜி.எஸ்.டி துறை, ஆக்ஸிஸ் வங்கியிடமிருந்து ரூ.42 லட்சத்தை மீட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இன்று தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெலுங்கு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க