சூர்யாவின் ‘காப்பான்’ ஃபர்ஸ்ட் லுக் - ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட் | Surya's Next movie tittle revealed

வெளியிடப்பட்ட நேரம்: 07:48 (01/01/2019)

கடைசி தொடர்பு:12:35 (01/01/2019)

சூர்யாவின் ‘காப்பான்’ ஃபர்ஸ்ட் லுக் - ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட்

சூர்யா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சூர்யா 37' என்ற பெயரிடப்படாத படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் புத்தாண்டு இரவில் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 37-வது படத்துக்கு காப்பான் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

கிறிஸ்துமஸ் தினத்தன்று, இயக்குநர் கே.வி.ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'சூர்யா 37' படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று கூறி அதற்கான பெயர்களைத் தேர்வுசெய்யுமாறு  மீட்பான், காப்பான், உயிர்கா ஆகிய மூன்று தலைப்புகளைப் பதிவிட்டிருந்தார். இந்த மூன்று தலைப்புகளை வைத்து ரசிகர்களிடையே ஓட்டெடுப்பு நடத்தினார். உயிர்கா எனும் தலைப்புக்கே ரசிகர்கள் பலரும் வாக்களித்தனர். படத்தின் பெயரானது புத்தாண்டு இரவில் 12.10 AM-க்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என கே.வி.ஆனந்த் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன்படி, படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 

இப்படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்யா, மோகன்லால், பொமன் இரானி, சமுத்திரக்கனி எனப் பெரிய நடிகர்கள் பலர் நடித்துவருகின்றனர். மோகன்லால் மற்றும் ஆர்யா ஆகியோருக்கு முக்கிய கதாபாத்திரம் எனக் கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். ஆண்டனி படத் தொகுப்பாளராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில், சூர்யா விஐபி-களைப் பாதுகாக்கும் கமாண்டோவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.   ஏற்கெனவே, செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே இருப்பதால், இந்த வருடம் சூர்யாவிடம் இருந்து இரண்டு படங்கள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது.