Published:Updated:

நடிகை அஞ்சலி மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு!

நடிகை அஞ்சலி மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு!
நடிகை அஞ்சலி மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு!

சென்னை: இயக்குனர் களஞ்சியத்தின் தமிழர் நலன் பேரியக்கம் சார்பில் நடிகை அஞ்சலி மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 

நடிகை அஞ்சலி மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு!

தமிழ் திரையுலகில் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை அஞ்சலி. தன்னை சித்தி, சித்தப்பா, இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் கொடுமைப்படுத்துவதாக  கூறி தலைமறைவானார் அஞ்சலி.

இரண்டு வார தலைமறைவு வாழ்க்கை பிறகு திடீரென ஹைதராபாத் போலீஸ் துணை கமிஷனர் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார் அஞ்சலி. இதையடுத்து, அஞ்சலியின் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

##~~##
இந்த நிலையில், இயக்குனர் களஞ்சியம் மீது அவதூறு பரப்பி வருவதாக கூறி தமிழர் நலன் பேரியக்கத்தின் சேலம் ஒருங்கிணைப்பாளர் முருகன், நடிகை அஞ்சலி மீது சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு வரும் 13ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.