உதிரிப்பூக்கள், 16 வயதினிலே, மூன்றாம் பிறை… அன்றும் இன்றும்.. திறமைக்கு மரியாதை #VikatanReviews #VikatanAwards | Top rated movies in Ananda Vikatan from 1970s - #APPAPPOClassics #VikatanAwards

வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (03/01/2019)

கடைசி தொடர்பு:12:22 (03/01/2019)

உதிரிப்பூக்கள், 16 வயதினிலே, மூன்றாம் பிறை… அன்றும் இன்றும்.. திறமைக்கு மரியாதை #VikatanReviews #VikatanAwards

உதிரிப்பூக்கள், 16 வயதினிலே, மூன்றாம் பிறை… அன்றும் இன்றும்.. திறமைக்கு மரியாதை #VikatanReviews #VikatanAwards

ல்ல திரைப்படங்களை எப்போதுமே அங்கீகரிக்கத் தவறியதில்லை ஆனந்த விகடன். இன்று 2018-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் திரை விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. திறமையை அங்கீகரிப்பதில் விகடன் என்றுமே முன்னோடிதான்!

விகடனின் திரை விமர்சனக்குழுவால் அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்பட்ட கிளாஸிக் படங்களின் விமர்சனக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது அப்பப்போ ஆப்! அப்பப்போ ஆப்பைத் திறந்தாலே தினம் ஒரு கிளாஸிக் மூவி ரிவியூ இருப்பது செம்ம டச். சினிமா ஆர்வம் ஊறிப் போய் இருக்கும் திரை ஆர்வலர்களிடம் இந்த ‘அப்பப்போ’ ரிவியூஸ் சூப்பர் ஹிட்!

அப்பப்போவில் இப்போது ஹிட்டாகியிருக்கும் பட விமர்சனங்களில் இருந்து சில ஷார்ப் ஒன்-லைனர்ஸ் இங்கே!

16 vayathinilae - Vikatan review - appappo

16 வயதினிலே - “ இரண்டு இடங்களில் `ஸ்டே’ (Stay) தெரிவதையும் நீங்கள் தவிர்த்திருக்கலாம். காந்திமதியுடன் சந்தைக்குப் புறப்படும் சமயத்தில் கமல் நின்று போவது நன்றாகத் தெரிகிறது. அதேபோல், கமல், ரஜினிகாந்தை அடித்துவிட்டு, குளக்கரைக்கு வரும்போது ஸ்ரீதேவியின் ஆக்ஷனுக்கு முன் குடத்தின் `ஸ்டே’ தெரிகிறது”

 

puthiya varpugal review - vikatan - appappo

 

புதிய வார்ப்புகள் - ``பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட காட்சிகள் நூற்றுக்கு நூறு இயற்கை. வழக்கமாக லேட்டாக வரும் மாணவன் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வந்து விட்டதற்கான காரணத்தை ஆசிரியர் கிண்டலுக்காகக் கேட்க, அவனும் ``ஆத்தா இருந்தாளா... அவகூட சண்டை போடுவேனா... அதனாலே தெனமும் லேட்டா வந்தேனா... முந்தாநாளு ஆத்தா செத்துப் போச்சு..." என்று இழுத்து இழுத்துப் பேசும்போது நெஞ்சு வெடிக்கிறது.”

 

uthiripookkal review - vikatan - appappo

 

உதிரிப்பூக்கள் - “முள்ளும் மலரும்' பட விமர்சனத்தில், ``இனி நீங்கள் எந்தப் படத்தை இயக்கினாலும் இந்தப் படத்தின் தரத்தை உங்களிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்" என்று குறிப்பிட்டிருந்தோம். அதை மிகவும் பொறுப்பு உணர்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, இந்தப் படத்தில் செயல்பட்டிருக்கிறீர்கள் இயக்குநர் மகேந்திரன்”

 

puthiya pathai - vikatan - appappo

 

புதிய பாதை - ``அனுபவமுள்ளவர்களையே கொஞ்சம் பயப்பட வைக்கிற `ரிஸ்க்'கான சப்ஜெக்ட்! புதியவரான டைரக்டர் பார்த்திபன் தைரியமாக எடுத்துக் கையாண்டிருக்கிறார்! இதைத்தான் `இளங்கன்று பயமறியாது' என்பார்களோ!”

 

முள்ளும் மலரும் - `` தன்மான உணர்வும், தங்கையிடம் தாய்க்கு நிகரான பாசமும் கொண்ட காளியின் பாத்திரப் படைப்பு தமிழ்த் திரைக்குப் புதியதல்ல என்றாலும், ரஜினிகாந்த் அதைச் செய்திருப்பதில் ஓர் அழுத்தத்தையும் ஆழத்தையும் காண்கிறோம். சிவாஜி ஏற்று நடித்த அண்ணன் வேடத்தை இப்போது சிவாஜி ராவ் (ரஜினி) ஏற்றிருக்கிறார். இவரும் சக்கைப் போடு போடுகிறார்.”

முழுமையான ரிவியூக்களைப் படிக்க.. இங்க க்ளிக் பண்ணி அப்பப்போ இன்ஸ்டால் செய்யுங்க.. 101 ரூபாய் ஃப்ரீயா பெறுங்க!