Published:Updated:

இயக்குனர் ராம்கி மீது ஜாக்குவார் தங்கம் புகார்!

இயக்குனர் ராம்கி மீது ஜாக்குவார் தங்கம் புகார்!
இயக்குனர் ராம்கி மீது ஜாக்குவார் தங்கம் புகார்!

சென்னை: 'சொல்லி அடிப்பேன்' படத்தை இயக்கிய இக்குனர் ராம்கி மீது, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் புகார் அளித்துள்ளார்.

இயக்குனர் ராம்கி மீது ஜாக்குவார் தங்கம் புகார்!

விவேக் ஹீரோவாக நடத்த 'சொல்லி அடிப்பேன்' படத்தை ராம்கி இயக்கினார். ஆனால்

##~~##
படம் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து, 'இதயம் திரையரங்கம்' என்ற திரைப்படத்தை இயக்கினார். தற்போது 'சண்ட படம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் ஜெயா டி.வி. பொறுப்பாளராக இருந்த சுனில் மகன். இன்னொருவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மகன் விஜய சிரஞ்சீவி.
இந்த நிலையில், சமீப காலமாக ராம்கிக்கும், ஜாக்வார் தங்கத்துக்கும் பனிப்போர் நடந்து வருகிறது. அது தற்போது பூதாகரமாக வெடித்து, ராம்கி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருக்கிறார் ஜாக்குவார் தங்கம்.