Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

facebook.com/Aadhavan Dheetchanya

ஆகாய மார்க்கிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:  அனேகமாக நாடாளுமன்றத்தேர்தல் வரை மோசமாகவும், சட்டமன்றத் தேர்தல் வரை மிகமோசமாகவும் இருக்கலாமெனக் கணிக்கப் படுவதால் தரையிறங்கவே வேண்டாமெனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வலைபாயுதே

twitter.com/cpmkanagaraj

உயிரைப் பணயம்வைத்துப் பணிபுரிந்தால் அவன் தொழிலாளி. ஹெலிகாப்டர் போகாதுன்னு திரும்பிவந்தா ‘விவசாயக் குடும்பத்திலிருந்து’ வந்த முதலமைச்சர்.

twitter.com/twittornewton

அந்தக்காலத்திலேயே motion poster இருந்தது. ஒரு தள்ளு வண்டியில் போஸ்டர் ஒட்டி, பேண்ட் வாசிச்சிட்டே தள்ளிட்டுவந்து நோட்டீஸ்லாம் கொடுப்பாங்க.

twitter.com/shivaas_twitz

வீட்டுக்கு வந்த விருந்தாளிகளிடம் என்ன பேசுவது என்று தெரியாதபோது, கைகொடுக்கின்றன கல்யாண/பிறந்த நாள் ஆல்பங்கள்..!

twitter.com/chithradevi_91

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வலைபாயுதே

என்னைக்கு ஆம்பளைங்க குடும்பக் கஷ்டநஷ்டத்தைப் புரிஞ்சுகிட்டு தண்ணி அடிக்காம சிகரெட் பிடிக்காம அடுத்த வீட்டுப் பொண்ணு பிள்ளைகள சைட் அடிக்காம பொண்டாட்டிக புள்ளைங்க பேச்சைக் கேட்டு இருக்காங்களோ அன்னைக்குதான் தமிழகத்தில் தாமரையும் மலரும்., இந்தியாவும் வல்லரசாகும்.

twitter.com/Kannan_Twitz

முன்னெல்லாம் குடும்பச் சண்டை வந்தா பெண்கள் அத அம்மா வீட்ல சொல்லலாமா வேணாமான்னு யோசிக் கிறதிலேயே ரெண்டு, மூணுநாள் ஆகிடும். அதுக்குள்ள சமாதானமாகி டுவாங்க, இப்போ போன், நெட்டுனு டெவலப் ஆனதால சண்டை போட்டுட்டு ஒரு கட்டிங் போட்டுட்டு வர்றதுக்குள்ளே பெண் வீட்டுக்காரங்கலாம் வாசல்ல ரெடியா உட்காந்திருக்காங்க.

twitter.com/Kozhiyaar

கைப்பேசி சார்ஜ் ஏறும் வரை காத்திருப்பது, பிரசவ அறைக்கு வெளியிலான காத்திருப்புக்கு ஈடானது.

twitter.com/Annaiinpillai

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு செய்யும் உதவி என்பது மூச்சுக்காற்றைப் போன்றது; அது வெளியில் தெரியாது.” - தமிழிசை சௌந்தரராஜன். # எங்களுக்கு மத்திய அரசே கண்ணுக்குத் தெரியலை - மக்கள்!

twitter.com/sweetsudha1

ஆண்களின் நினைவுசக்தி ரொம்ப விசித்திரமானது. காலையில் வாங்கி வரச்சொன்ன வீட்டு உபயோகப் பொருள்கள் மாலையில் நினைவு இருக்காது, ஆனால், 12 வருஷத்துக்கும் முன்னால் பிரிந்த காதலியை மட்டும் மறக்கவே மாட்டார்கள்!

வலைபாயுதே

  twitter.com/mohanramko

‘தர்மம் தலை காக்கும்’ என்பதற்கு பதிலாக ‘முடியைக் காக்கும்’னு சொல்லியிருந்தா, தர்மம் செய்றவங்களாவது அதிகமாகியிருப்பாங்க.
 
twitter.com/thoatta

புயல் வருது மழை வருதுன்னு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கு பயம் வேண்டாம்னு சொன்ன சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சருங்கள்ல யாரு யாரு அங்கயே தங்கியிருந்தாங்கன்னு லிஸ்ட் இருந்தா தாங்க, நிலைமை சரியான பின் பாராட்டு விழா நடத்தணும் ;-) 

twitter.com/19SIVA25

என்னுடன் மோத முடியாதவர்கள் என் தாயைப் பழிக்கின்றனர் - மோடி. அடுத்த சீன் அழுவுறதுதானே..! ஓகே ஜி டேக் போகலாம்!!

facebook.com/Karna Sakthi


“கீழே இறங்கவே பயமாக இருக்கிறது பிடல்... தொட்டுப்பாருங்கள், காய்ச்சல் அடிக்கிறதா?”

“ஆமாம் சே குவேரா எனக்கும்.”

வலைபாயுதே

facebook.com/Rajan Kurai Krishnan

புயல் வந்ததற்கு அரசாங்கம் காரணம் அல்ல. - ஆவடி குமார் விளக்கம் # இத்தனை நாள் இவர் விவாதங்களில் பங்கேற்காதது எவ்வளவு பெரிய இழப்பு!

twitter.com/twittornewton

தமிழ்ப்படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக நடிப்பதும், இந்திப் படங்களில் வித்யா பாலனின் கணவராக நடிப்பதும் ஒரே மாதிரி.

சைபர் ஸ்பைடர்