Published:Updated:

அனிதா சுயசரிதை படம் எடுப்பது பி.ஜே.பி ஆதரவாளர் - தடைபோடும் தந்தை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அனிதா சுயசரிதை படம் எடுப்பது பி.ஜே.பி ஆதரவாளர் - தடைபோடும் தந்தை
அனிதா சுயசரிதை படம் எடுப்பது பி.ஜே.பி ஆதரவாளர் - தடைபோடும் தந்தை

அனிதா சுயசரிதை படம் எடுப்பது பி.ஜே.பி ஆதரவாளர் - தடைபோடும் தந்தை

பிரீமியம் ஸ்டோரி

ருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு, நீட் தேர்வினால் நிறைவேறாமல் போய்விட்டது என்பதால் உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கப்படுகிறது. அந்தப் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார் அனிதாவின் தந்தை சண்முகம். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

அனிதா சுயசரிதை படம் எடுப்பது பி.ஜே.பி ஆதரவாளர் - தடைபோடும் தந்தை

‘‘அனிதாவின் வாழ்க்கையை வைத்துத் திரைப்படம் எடுக்கப்படுவது நல்ல விஷயம்தானே? அதற்கு எதிராக ஏன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தீர்கள்?’’

‘‘அனிதாவைப் பற்றி படம் எடுப்பது நல்ல விஷயம்தான். ஆனால், யார் எடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அனிதாவின் பிறந்த நாளில், ‘டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்’ என்ற படத்தைத் தொடங்கப்போவதாக அதன் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அது எங்களுக்குத் தெரியாது.

அனிதா கேரக்டரில் ஜூலி நடிப்பதாகவும், அதன் இயக்குநர் அஜய் என்றும் கேள்விப் பட்டோம். அஜய்யின் தொடர்பு எண்ணை வாங்கி, ‘எங்களிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், எப்படி அனிதாவைப் பற்றி படம் எடுக்கப்போகிறீர்கள்?’’ என்று கேட்டோம். அவர், முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். ஒருகட்டத்தில், ‘உங்களிடம் பேசவேண்டிய அவசியம் இல்லை’ என்றார். அவரை நேரில் பார்த்துவிடலாம் என்று சென்னையில் உள்ள அவருடைய அலுவலகத்துக்குச் சென்றோம். அவர் உள்ளே இருந்துகொண்டு, ‘இன்னும் வரவில்லை’ என்று சொல்லி அனுப்பினார்கள். அவரைப் பற்றி நாங்கள் விசாரித்தபோது, அவர் பி.ஜே.பி ஆதரவாளர் என்பது தெரியவந்தது. அவரது முகநூல் பக்கத்தில், ‘மோடியை விமர்சிப்பதும் நாட்டைக் குழியில் தள்ளுவதும் ஒன்று’, ‘ஹெச்.ராஜா புனிதர்’ என்பது போன்ற கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்ததே மத்திய பி.ஜே.பி அரசுதான். அதன் ஆதரவாளரான ஒருவர், அந்தப் படத்தில் அனிதாவின் வாழ்க்கையை நிச்சயம் தவறாகவே சித்தரிப்பார். எனவேதான், இந்தப் படத்துக்குத் தடை கோருகிறோம்.

அனிதாவைத் தன் தங்கையாக நினைக்கும் பா.இரஞ்சித், கோபி நயினார், வ.கெளதமன், எஸ்.பி.ஜனநாதன் போன்றவர்கள் அனிதா பற்றி படம் எடுத்தால், அதை ஏற்றுக்கொள்வோம்.’’

‘‘நீங்கள் பண நோக்கத்துக்காகச் செயல்படுவதாக அந்தப் படத்தின் குழுவினர் குற்றம்சாட்டுகிறார்களே?’’

‘‘இந்தப் படத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தினோம். அதன் பிறகு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியபோது, ‘செலவு இல்லாமல் நம் படத்துக்கு விளம்பரம் செய்கிறார்கள்’ என்று அந்த இயக்குநர் கிண்டலாகப் பேசியிருக்கிறார். அதுவே எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது. இதனால்தான் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தோம்.’’

‘‘அனிதா இல்லாத உங்கள் குடும்பம் எப்படி இருக்கிறது?’’

‘‘பட்டாம்பூச்சிபோல சிறகடித்துப் பறந்துகொண்டிருந்த என் மகள் அனிதா, நீட் தேர்வால் மருத்துவர் ஆகமுடியாத ஆதங்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்டாள். என் மகளின் இறப்புக்குக் காரணம் மத்திய, மாநில அரசுகள்தான். அனிதாவின் இறப்பே இறுதியாக இருக்கட்டும். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதற் காக, அனிதா அறக்கட்டளையை ஆரம்பித்திருக்கிறோம். அதில் மாணவ, மாணவி களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். எங்களின் கனவு நெடியது. அதை நோக்கிப் பயணிக் கிறோம்.’’

அனிதா சுயசரிதை படம் எடுப்பது பி.ஜே.பி ஆதரவாளர் - தடைபோடும் தந்தை

‘‘அனிதா பெயரில் நீங்கள் ஆரம்பித்துள்ள நூலகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.’’

‘‘1,800 சதுர அடி பரப்பளவில் புதிய நூலகம் அமைத்துள்ளோம். அதில், ஆறு வரிசைகளில் 2,000-க்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. 12-ம் வகுப்புக்கு மேல் என்ன படிக்கலாம், எப்படி விண்ணப்பம் செய்வது, எந்தப் படிப்புக்கு எங்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது, அதிக மதிப்பெண் எடுக்க எவ்வாறு படிக்க வேண்டும் என்பது போன்ற பயனுள்ள வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்கும் வகையில், கல்வி மற்றும் விழிப்பு உணர்வுக் கருத்தரங்குகளை நடத்திவருகிறோம். இந்த வழிகாட்டல்களைக் கல்வி வல்லுநர்கள் வந்து அளிக்கிறார்கள். இதுவரை, எம்.பி.பி.எஸ் படிக்கும் மூன்று மாணவிகளுக்கு அனிதா அறக்கட்டளை மூலமாக உதவி செய்திருக்கிறோம். 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.’’

- எம்.திலீபன்

தவிர்க்கும் அஜய்!

துகுறித்து படத்தின் இயக்குநர் அஜய்யின் கருத்துகளைப் பெற தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம். அவர் தரப்பிலிருந்து பதில் இல்லை. அவர் தன் தரப்பு கருத்துக்களை கூற முன்வரும் பட்சத்தில் வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு