`எல்லோருக்கும் சந்தோஷமா வாழணும்னு ஆசை’ - இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் `ஐரா’ டீசர் | nayanthara's Airaa Teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (05/01/2019)

கடைசி தொடர்பு:18:16 (05/01/2019)

`எல்லோருக்கும் சந்தோஷமா வாழணும்னு ஆசை’ - இரட்டை வேடத்தில் நயன்தாரா நடிக்கும் `ஐரா’ டீசர்

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் `ஐரா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

நயன்தாரா

`விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை 'லக்‌ஷ்மி', 'மா' குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தையும் இயக்கிய சர்ஜுன் இயக்குகிறார். `ஐரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மாயா, டோரா படங்களைப் போன்று இப்படம் ஹாரர் அட்வெஞ்சர் ஜானரில் தயாராகவுள்ளது. நயன்தாரா இப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நயன்தாரா

மெட்ராஸ் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் 'கோலமாவு கோகிலா' படத்தில் கலக்கிய யோகி பாபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நயன்தாராவின் தோழியாக `தர்மதுரை' படத்தில் நடித்த திருநங்கை ஜீவா நடித்துள்ளார். `அறம்' படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இப்படத்துக்கு ஜோகேஷ் கார்த்திக் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் திகிலூட்டும் காட்சி அமைப்புகள், இசை சிறப்பாக அமைந்துள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க