வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (07/01/2019)

கடைசி தொடர்பு:12:27 (07/01/2019)

``என்னை பப்ளினு சொல்றாங்க; அதைப்பத்தி கவலையில்லை!" -நடிகை குஷ்பு

குஷ்பு
 

மிழ் சினிமாவின் எவர்கிரீன் ஐகான், நடிகை குஷ்பு. தமிழ் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகளை நிறைவுசெய்தவர், தன் பர்சனல் விஷயங்கள்குறித்துப் பேசுகிறார்.

``என்னை நடிகையாகவும், மகளாகவும் ஏத்துகிட்ட தமிழ் ரசிகர்கள், மருமகளாகவும் என்மேல் அன்புகாட்டினாங்க. அன்பான கணவர், அழகான குடும்பம்னு வாழ்க்கை அர்த்தமுள்ளதாகப் போகுது. நான், தமிழ் சினிமாவில் நடிக்க வந்து 30 வருஷம் முடிஞ்சுடுச்சு.  சினிமாவில் எனக்குனு தனி அடையாளம் பெற்றிருக்கிறேன். இப்போவரை, என் வயசுக்கு ஏத்த ரோல்ல நடிக்கவே விருப்பப்படுவேன். கஷ்டப்படுற குடும்பத்துப் பொண்ணு கேரக்டர் எனக்கு செட் ஆகாது. அப்படியான கதைகளை நிச்சயம் தவிர்த்துடுவேன்.

குஷ்பு

நடிக்க வந்த தொடக்கத்திலிருந்து இப்போ வரை, பலரும் என்னை பப்ளினு சொல்றாங்க. அப்படியான பேச்சுகளை நான் பெரிசா எடுத்துக்க மாட்டேன். இப்படியான தேவையில்லாத பேச்சுக்களை கேட்டுக்கிட்டு இருந்தால், என் வேலையில கவனம்செலுத்த முடியாது. எனக்கு கேரக்டரும், நடிப்பும்தான் முக்கியம். அதுக்காக அர்ப்பணிப்புடன் உழைப்பைக் கொடுப்பேன். ஆனா, ஜீரோ சைஸ்' உடலமைப்பில் எனக்கு உடன்பாடில்லை. யார் என்ன வேண்ணாலும் பேசிட்டுப் போகட்டும். என் இயல்புல நான் இருக்கவே ஆசைப்படறேன்" என்று அழுத்தமாகக் கூறுகிறார், குஷ்பு.

16 வயதில் குடும்பப் பொறுப்புகளைச் சுமந்தது; முன்னணி நடிகையாக உயர்ந்தது; தன் மீதான வழக்குகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றது; அரசியல் பயணத்துக்கான அடித்தளம் உட்பட, தன் வாழ்க்கைப் பயணம் பற்றி முழுமையாகப்பேசுகிறார், நடிகை குஷ்பு. நாளை (08.01.2019) வெளியாகும் 'அவள் விகடன்' இதழில், 'எவர்கிரீன் நாயகி' என்ற புதிய தொடரில்.