Published:Updated:

ரஜினியின் இளைய மகள் திருப்பதியில் வேண்டுதல்!

ரஜினியின் இளைய மகள் திருப்பதியில் வேண்டுதல்!
ரஜினியின் இளைய மகள் திருப்பதியில் வேண்டுதல்!

`மறுமணம் சிறப்பாக நடக்கவும், நல்ல வாழ்க்கை அமைய வேண்டியும்’ ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா தன் தாயுடன் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். சமீபத்தில், நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனை, சௌந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார். நிச்சயதார்த்தமும் நடந்துவிட்டது. திருமணம், அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெற உள்ளது. இந்த நிலையில், சௌந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்றிரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். இவர்களுடன், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என 20 பேர் திருப்பதி சென்றிருந்தனர். திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுத்தனர். 

பின்னர், இன்று காலை சிறப்பு தரிசனத்தில் சுவாமி ஏழுமலையானை, சௌந்தர்யா, லதா ரஜினிகாந்த் தரிசனம் செய்தனர். ‘மறுமணம் தடங்கலின்றி சிறப்பாக நடைபெற வேண்டுமென்று’ சாமியிடம் சௌந்தர்யா வேண்டிக்கொண்டார். லதா ரஜினிகாந்த், ‘‘மகளின் மறுமணம் நன்றாக நடக்க வேண்டும். 10-ம் தேதி வெளியாகும் கணவரின் ‘பேட்ட’ திரைப்படம் பட்டய கிளப்ப வேண்டும்’’ என்றும் வேண்டிக் கொண்டார். திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜித்து பெற்றுக்கொண்டனர். லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா தரிசனம் செய்த பிறகு, ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்குத் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.