Published:Updated:

கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?

கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?

கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?

கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?

கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?

Published:Updated:
கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?
கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

தேர்தல் முடிவுகள், மோடி முன்னாள் பிரதமராகப் போகிறார் என்பதைத்தானே காட்டுகின்றன?


காங்கிரஸ், தான் ஆட்சியில் இருந்த மிசோரம் மாநிலத்தைப் பறிகொடுத்துவிட்டு, பி.ஜே.பி-யிடம் இருந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைக் கைப்பற்றியுள்ளது. மத்திய பிரதேசத்திலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆக, ஆளுங்கட்சிகளுக்கு எதிரான தீர்ப்பு என்றே பார்க்க வேண்டும். விதிவிலக்காக தெலங்கானாவில் மீண்டும் ஆளுங்கட்சியே வென்றிருக்கிறது. ஆனால், அது புதிய மாநிலம். அந்த மாநிலம் உருவாவதற்குக் காரணமாக இருந்ததும் அந்தக் கட்சி. அந்த வகையில் அதற்கு மரியாதை செய்துள்ளனர் மக்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகக்கூடி, பி.ஜே.பி-க்குக் கஷ்டகாலம் ஆரம்பித்து விட்டது.

கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?

சந்திரசேகரன் டி., சென்னை-69.

தனக்குக் கிடைத்த வாய்ப்பை பி.ஜே.பி கெடுத்துக் கொண்டதுதானே?

ஆம், ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாகத் தான் போய்விட்டது. இதை நினைக்கும்போது,

‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன், நாலாறு மாதமாய் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி
அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி’


என்ற பழம் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

எம்.எஸ். பாண்டியன், காஞ்சிபுரம்.

மூன்று மாநிலங்களில் காங்கிரஸின் வெற்றி, ராகுல் காந்தியின் தலைமைக்குக் கிடைத்த மரியாதைதானே?


மிசோரம், தெலங்கானா மாநிலத் தோல்விகள், ராகுல் காந்திக்குக் கிடைத்த அவமரியாதைதானே!

@அ.சுகுமார், கல்புதூர், காட்பாடி.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளால் ஏற்படவிருக்கும் உடனடி விளைவுகள் என்ன?


விவசாயக் கடன் தள்ளுபடி, கூட்டணிகளுக்கு வேட்டு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அமைச்சரவை முடிவு...எக்ஸ்செட்ரா... எக்ஸ்செட்ரா..!

உமாபார்வதி எம்.டி. சென்னை-69.

கஜா புயல் பாதிப்புகளைப் பார்வையிட வருகை தராத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு மட்டும் தமிழகத்துக்கு வருகிறாரே?


தலைவர்களுக்கு மரியாதை செய்தால் ஒன்றிரண்டு தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும். மக்களை மதித்து ஒன்றும் ஆகப்போவதில்லையே அவர்களுக்கு!

எம்.பாலசுப்பிரமணியம், திருவண்ணாமலை.

கடந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழைகளுக்கு, அப்பாவி மாணவர்கள் தண்டிக்கப்பட்டனர். இந்த ஆண்டாவது சரியாக மொழிபெயர்ப்பார்களா?

கடந்த ஆண்டு நடந்த அநியாயம்... வேறு எங்குமே நடந்திராதது. தவறு செய்தவர்களைத் தண்டிப்பதைவிட்டுவிட்டு, தமிழக மாணவர்களைத் தண்டித்தது கொடுமையிலும் கொடுமை. ஆனால், ‘இந்த நாட்டில் நீதி என்கிற ஒன்று இருக்கிறதா?’ என்கிற கேள்வியைக்கூட எழுப்புவதற்குத் துணிவில்லாதவர்களாக, சர்வ சாதாரணமாக இதைக் கடந்துவிட்டனர் தமிழகத் தலைவர்கள். இவர்களையெல்லாம் நம்பித்தான் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த ஆண்டாவது சரியாக மொழிபெயர்க்கிறார்களா என்று பார்ப்போம்.

மு.மதனகோபால், பஸ்தி, ஒசூர்.

பெட்ரோல் விலை உயர்வுப் போராட்டம் பிரான்ஸ் நாட்டிலும் உண்டு போல் தெரிகிறதே?


உலகம் முழுக்கவே இதுபோன்ற போராட்டங்களை உருவாகிக்கொண்டிருக்கிறது. பொருளாதார ரீதியில் பெரும்பாலான நாடுகள் திவால் நிலை நோக்கிப்போய்க்கொண்டுள்ளன என்பதன் அறிகுறியே இது.

கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?

னோகரன், சின்னதாராபுரம்.

காதல் திருமணம்... நிச்சயிக்கப்பட்ட திருமணம்?


திருமண முறைகளால் எதையும் சாதித்துவிட முடியாது. இருமனங்களும் ஒரு மனமாக நின்று, வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்து வாழத் தலைப்பட்டால் மட்டுமே அது திருமணம். அதை விடுத்துத் திருமண முறைகளைக் குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை. சடங்கு, சம்பிரதாயங்கள் என்றெல்லாம் உருவாகாத காலத்திலிருந்தே ஆண் - பெண் இணைந்து உருவாக்கியதுதான் மனித சமூகம்.

டி.சந்திரன், ஈரோடு.

மறைந்த தலைவர்களின் பிறந்தநாளில் சிறந்த தொழிற்சாலைகள், சிறப்பான கல்விக் கூடங்கள் திறப்பது சரியா? திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று சிறையிலிருந்து திறந்துவிடுவது சரியா?

ஆட்சியில் இருப்பவர்களுக்கு எது தேவையோ... அதைத்தானே செய்ய முடியும். நியாயங்களைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.

@சரவணன் ஓ.ஏ.கே.ஆர்., சென்னை-2.

நடிகை ரோஜா, தன்னுடைய தொகுதியில் மலிவு விலை உணவகம் திறந்திருக்கிறாரே?


உண்மையிலேயே தீயாகத்தான் வேலை செய்கிறார் ரோஜா. அடிக்கடி இப்படி எதை யாவது செய்வதன் மூலமாக, தனக்கு அரசியல் கற்றுத் தந்தவரும் ஆந்திர அரசியலின் அசகாய சூரனுமான சந்திரபாபு நாயுடுவுக்கே சவால் விடுகிறார். மறைந்த காங்கிரஸ் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன் ரெட்டி நடத்திவரும் (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்) கட்சியில் இணைந்து, கொஞ்சம் கொஞ்சமாக மணம் வீச ஆரம்பித்திருக்கும் ரோஜாவை வாழ்த்துவோம்.

கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.

என்னைத் தேர்ந்தெடுக்கா விட்டால் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்று பிரசாரத்தின்போது மிரட்டிய ராஜஸ்தான் மாநில பி.ஜே.பி அமைச்சர் என்ன ஆனார்?

நிம்ப்ஃரா தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீசந்த் க்ருபளானி என்ற அந்த அமைச்சர், காங்கிரஸால் தோற்கடிக்கப் பட்டு விட்டார். மேற்கொண்டு பாதுகாப்புக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.

கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?

@நீலன், கோவை.

‘தமிழக ஆட்சியாளர்கள் ஊழல் மட்டுமே செய் கிறார்கள்... மக்களைக் கவனிப்பதே இல்லை. எனவே, ஆட்சியைக் கலையுங்கள்’ என்று குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினால் ஏதாவது நடக்குமா?


ஒருவேளை உங்கள் கடிதத்துக்கு மதிப்பளிக்கப் பட்டால்... தேர்தல் நடக்கும். புதிய ஆட்சி வந்ததும் மறுபடியும் ஊழல் நடக்கும். அதாவது, திரும்பவும் முதல் புரோட்டாவிலிருந்து..!

உமரி.பொ.கணேசன், மும்பை-37.

நேர்மையானவர்களை, ‘பிழைக்கத் தெரியாதவன்’ என்று முத்திரை குத்திவிடுகிறார்களே?


நேர்மையானவர்கள், இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. போற்றுவதும் தூற்றுவதும் அவர்களை பாதிப்பது இல்லை.

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

கஜா புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒரு பைசாவைக்கூட தரவில்லை என்று தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் சொல்வது உண்மையா?


தமிழகத்தின் அமைச்சரே சொல்கிறார். அதில் உண்மையில்லாமல் போகுமா என்ன!

@மனோகா, திருச்சி.

‘தலித் அமைப்புகள் தனித்துக் கூட்டணி அமைக்க வேண்டும்’ என இயக்குநர் பா.இரஞ்சித் சொல்கிறாரே?

தனது திரைப்படங்களில் பட்டியல் இனத்தவர் விடுதலையை முன்னெடுத்துவரும் பா.இரஞ்சித்துக்கு இது 2.0!

கழுகார் பதில்கள்! - நீட்... இனியாவது நியாயம் கிடைக்குமா?

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 kalugu@vikatan.com
என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!