இது பாலா ஸ்டைல் `அர்ஜுன் ரெட்டி'! - வெளியானது `வர்மா’ டிரெய்லர்! | Bala's varma trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (09/01/2019)

கடைசி தொடர்பு:17:49 (09/01/2019)

இது பாலா ஸ்டைல் `அர்ஜுன் ரெட்டி'! - வெளியானது `வர்மா’ டிரெய்லர்!

வர்மா

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த திரைப்படம், `அர்ஜுன் ரெட்டி.’ இத்திரைப்படத்தை இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்து இயக்குகிறார். விக்ரம் மகன் துருவ் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார். துருவுக்கு ஜோடியாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நடிகை மேகா நடித்திருக்கிறார். 
முக்கிய வேடங்களில் ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் புகழ் ரைஸா வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இதை ‘E4 என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. `அர்ஜுன் ரெட்டி’ படத்துக்கு இசையமைத்த ரதன்தான் `வர்மா’-வுக்கும் இசையமைத்திருக்கிறார்.

வர்மா
 

இந்தப் படத்தை பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் ஸ்பெஷல் ட்ரீட்டாக ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள `வர்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியானது. நடிகர் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். ரீமேக் என்றாலும் காட்சிக்குக் காட்சி செம மாஸாக பார்த்து பார்த்துச் செதுக்கியிருக்கிறார் பாலா. பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. `வர்மா’ டிரெய்லர் பற்றிய உங்களின் கருத்தை இங்கே பதிவு செய்யலாம்! 
 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க