வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (09/01/2019)

கடைசி தொடர்பு:18:33 (09/01/2019)

`இது நம்ம பூமி.. தாய் மாதிரி' - வெளியானது கண்ணே கலைமானே டிரெய்லர்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சீனுராமசாமி இயக்கும் கண்ணே கலைமானே படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கண்ணே கலைமானே


இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை பொதுமக்களின் ஆதரவைக்கடந்து அரசியல்வாதிகளிடையே கூட பெரும் வரவேற்பை பெற்றது. கிராமத்து நெடியில் உருவான அந்தப் படம் வணிக ரீதியாகவும் வசூலை குவித்தது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சீனுராமசாமி இயக்கும் புதிய படம் `கண்ணே கலைமானே'. இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் வடிவுக்கரசி, வசுந்தர காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

உதயநிதி

படத்துக்கு ஜலன்தர் வாசன் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்துள்ளனர். படத்தின்  டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்மையில் படத்தின் முதல் பாடலான, `எந்தன் கண்களைக் காணோம்' என்ற பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை மையமாகக் கொண்டும் படம் உருவாகியுள்ளது.