இது ‘பேட்ட’ ஸ்பெஷல் திருமணம்! - தியேட்டர்களைத் தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள் | Couple got marriage at Woodlands theater where Petta released

வெளியிடப்பட்ட நேரம்: 09:24 (10/01/2019)

கடைசி தொடர்பு:09:24 (10/01/2019)

இது ‘பேட்ட’ ஸ்பெஷல் திருமணம்! - தியேட்டர்களைத் தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு பெரிய ஹீரோவின் திரைப்படம் வெளியாகிறது என்றால், அன்றைய தினம் அவர்களின் ரசிகர்களுக்குத் திருவிழாதான். பேனர்கள், கட் அவுட்டுகள், தோரணங்கள், போஸ்டர்கள், மேளதாளங்கள் எனப் படம் வெளியாகும் தியேட்டரையே அதகளப்படுத்துவார்கள். 

பேட்ட ரஜினி

நடிகர்கள் ரஜினி நடிப்பில்  ‘பேட்ட’ மற்றும் அஜித் நடிப்பில்  ‘விஸ்வாசம்’ ஆகிய இரு திரைப்படங்களும் பொங்கல் சிறப்பாக இன்று திரைக்கு வந்துள்ளன. இந்தப் படங்கள் தமிழகம் முழுவதும் அதிகாலையிலேயே திரையிடப்பட்டது. ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் போட்டிபோட்டுக்கொண்டு தங்களின் ஹீரோக்களைக் கொண்டாடிவருகின்றனர்.

பேட்ட திருமணம்

 

PC :Twitter/ @Me_dineshudhay

இந்நிலையில், ரஜினியின்  ‘பேட்ட’ படம் வெளியான திரையரங்குகளில் சில ஜோடிகளுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர், ரஜினி ரசிகர்கள். ரஜினியின் தீவிர ரசிகரான அன்பரசு என்பவர், தன் காதலி காமாட்சியை சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

PC :Twitter/ @Me_dineshudhay

ஏழைத் தம்பதியான இவர்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த பிறகு தம்பதிக்குச் சீர்வரிசை வழங்கியும் தியேட்டரின் வெளியில் உணவு வழங்கியும் அமர்க்களப்படுத்தியுள்ளனர்.  இதேபோன்று தஞ்சை சாந்தி திரையரங்கிலும் ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது.