Published:Updated:

திரையரங்கு முன்பு அதிகாலையில் பொங்கலிட்ட பெண்கள்! - ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

திரையரங்கு முன்பு அதிகாலையில் பொங்கலிட்ட பெண்கள்! - ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
திரையரங்கு முன்பு அதிகாலையில் பொங்கலிட்ட பெண்கள்! - ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

நாகர்கோவிலில், ரஜினியின் 'பேட்ட' சினிமா வெளியிடப்பட்ட தியேட்டர் முன்பு, 69 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டுக் கொண்டாடினர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முதல்முறையாக ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம், ‘பேட்ட’. இப்படத்தில், விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் எனப் பலர் நடித்துள்ளனர். பொங்கல் வரவாக ரஜினி நடித்த `பேட்ட' சினிமா இன்று வெளியானது. நாகர்கோவில் சக்கரவர்த்தி மாலில் இரண்டு தியேட்டர்கள் மற்றும் வசந்தம் பேலஸ் என 3 திரையரங்குகளில் ரஜினியின் 'பேட்ட' சினிமா திரையிடப்பட்டுள்ளது. வசந்தம் பேலஸ்ஸில் இன்று காலை 6 மணி காட்சிக்காக அதிகாலை 5 மணிக்கே தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

முதல் காட்சிக்கு தொடங்கும் முன், 69 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டனர். ரஜினியின் வயதைக் குறிப்பிடும் விதமாக 69 பானைகளில் பொங்கலிட்டதாக ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் தங்கம் தெரிவித்தார். மேலும், ரஜினியின் கட்டவுட்டுக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர். காலையில், முதல் காட்சிக்கு முன், திரையரங்கின் ஸ்கிரீனுக்கு ரசிகர்கள் சூடம் காட்டி ஆரத்தி எடுத்தனர். வசந்தம் பேலஸ் தியேட்டரில் இன்று 5 காட்சிகள்.