பிரீமியம் ஸ்டோரி

twitter.com/nandhu_twitts

ஈ, எறும்புக்குக்கூட துரோகம் நினைக்காத மனசுதான்.

கொசுக்கள கண்டதும் அதன் மொத்த சந்ததியையும் அழிச்சிடத் தோணுது..!

twitter.com/mekalapugazh

வலைபாயுதே

ஐந்து வருட ஆட்சியில்... தேசியகீதத்தை இந்திக்கு மாற்றாத பா.ஜ.க-வின் பெருந்தன்மையை யாருமே பாராட்டாதது சலிப்பாக இருக்கிறது... 

twitter.com/Thaadikkaran


விரும்பித் தந்தாலும் ஒரு பைசாகூட லஞ்சம் வாங்கமாட்டேன் - பொன். ராதாகிருஷ்ணன் #செல்லாது, அதனாலேதானே..! 

twitter.com/manipmp

மாஸ் ஹீரோ ஓப்பனிங் சாங்கிற்கு இணையாக இருப்பது

நம் ராசிபலனின் முதல் வரிகள்தான்...

“பொறுமையும் புத்திசாலித்தனமும் உள்ள ரிஷபராசிக்காரர்களே... 

twitter.com/shivaas_twitz

 
ஊழலும் உப்புமாவும் ஒண்ணுதான்...

எல்லோரும் அதற்கு எதிரா பேசிக்கிட்டே இருப்பாங்க... ஆனா, ஒழிக்க முடியாது..!

twitter.com/Thaadikkaran

வலைபாயுதே


டிவியில் வரும் காமெடி ஷோவில் சிரிப்பே வராத ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கும் நபர்களுக்கு ‘ஜட்ஜ்’
என்று பெயர்..!

twitter.com/nandhu_twitts

`கிளி’க்கு தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாமல், அடைபட்டுத் தவிக்கும் தறுவாயில்...

மனிதனின் எதிர்காலத்திற்கு சீட்டு எடுத்து போடுவது எல்லாம் எவ்வளவு வேடிக்கையானது..! 

twitter.com/muruganv71

வலைபாயுதே

வாரநாள்கள்ல, கல்யாணமான புதுமாப்பிள்ளைய மாமியார் வீட்ல வரவேற்கிற மாதிரி கவனிக்கிற சலூன்காரங்க,ஞாயிற்றுக்கிழமையில மட்டும் ஆகாத மருமகனை டீல் பண்ற மாதிரியே நடந்துக்கிறாங்க.

twitter.com/yugarajesh2

எந்த விழாவாக இருந்தாலும் அதை ஸ்டாலின் கூட்டணிக் கட்சி விழாபோல நடத்துகிறார் -தமிழிசை #ஆனா, நாம எந்த விழா நடத்தினாலும் அது ‘காலி சேர்களின்’ கண்காட்சி மாதிரிதானே இருக்கு..!

twitter.com/shivaas_twitz

பையன்கள் பா.ஜ.க மாதிரி இருந்தாலும்,

அம்மாக்கள் அ.தி.மு.க மாதிரி...

பையனை அவ்ளோ சீக்கிரத்துல விட்டுக்கொடுக்க மாட்டாங்க..! 

twitter.com/sultan_Twitz

வலைபாயுதே

அ.தி.மு.க சீராக இயங்கும் 230 வோல்ட்ஸ்; தினகரன் எதற்கும் பயன்படாத ஹை வோல்டேஜ் - அமைச்சர் ஜெயக்குமார் #

இரண்டு பேரோட பீஸ்கேரியர் மட்டும் டெல்லி கன்ட்ரோலில் இருக்கும்..?! 

twitter.com/mohanramko

மதிய சாப்பாடு முடிந்ததும் நம்ம உடம்பில் உள்ள எல்லா செல்லுமே, ‘ஸ்லீப்பர்’ செல்கள்தான்

twitter.com/Aravindan_V_007

ஒரு ஆன்டி ஹைதராபாத்ல இருந்து கால் பண்ணி தமிழ்ல பேசுது!

சார் உங்க மொபைல் நம்பருக்கு ஒரு பவுன் தங்க வளையல் பரிசு விழுந்திருக்குன்னு 600 ரூவா கொரியர் காசு அண்டு அட்ரச கேட்டு!

வலைபாயுதே

அத வித்து அதுல 600ரூவாவ எடுத்துட்டு மிச்சத்த வேணா கொரியர்பண்ணச் சொன்னா, போன வெச்சிருச்சி!

twitter.com/yugarajesh2

கஞ்சா கருப்பு அதிமுகவில் இணைந்தார் என்கிற செய்தியைப் படிக்கும்போது ‘பஞ்சாயத்து பால்டாயிலை குடிச்சிட்டாங்கிற’ வசனம்தான் ஞாபகம் வருது. 

twitter.com/19SIVA25

பிரதமர் விரைவில் டெல்டாவுக்கு வருவார் - பொன்னார்

அதுக்கு அம்பானி பொண்ணு வரவேற்பை நாகப்பட்டினத்துல வச்சாதான் உண்டு!  

வலைபாயுதே

twitter.com/DLXsU

கலைஞர் சிலை திறப்புவிழாவில் அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர்.ஜெயலலிதாவின் மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தில் நிற்கிறார்கள்!

twitter.com/meenammakayal_

மனசுக்குப் பிடிச்ச வேலையப் பாரு, உனக்கு எது சந்தோசம் தருதோ அந்த வேலையப் பாருன்னு சொல்றாங்க... நமக்கு சும்மாருக்கத்தான் பிடிச்சிருக்குன்னு எப்பிடி சொல்றது?! 

சைபர் ஸ்பைடர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு