`நான் நீண்ட நாள்களாகக் காத்திருந்த ரஜினி படம்’ - `பேட்ட' படத்துக்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு! | dinesh karthik praised rajini's petta movie

வெளியிடப்பட்ட நேரம்: 05:39 (14/01/2019)

கடைசி தொடர்பு:08:08 (14/01/2019)

`நான் நீண்ட நாள்களாகக் காத்திருந்த ரஜினி படம்’ - `பேட்ட' படத்துக்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு!

நீண்ட நாள்களாக நான் பார்க்க காத்திருந்த படம் `பேட்ட' என இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

பேட்ட

`எந்திரன்' படத்துக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளிவந்திருக்கும் புதிய படம் `பேட்ட.’ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக், சிம்ரன், மேகா ஆகாஷ் எனப் பலர் நடித்துள்ளனர். கடந்த 10-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்துக்குப் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் எழுந்து வருவதால் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்து வருகிறது. இந்நிலையில், `பேட்ட' படம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். 

தினேஷ் கார்த்திக்

‘பேட்ட’ நான் நீண்ட நாள்களாகக் காத்திருந்த ரஜினி படம். ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது சிரித்த முகத்துடன் வந்தால் அப்படம் உங்களுக்கு எவ்வளவு பிடித்திருக்கும் என்பது தெரியும். இந்த மாதிரியான ரஜினி படத்தை எடுத்ததற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்துகள். அனிருத் இப்படத்துக்கு சிறந்த பின்னணி இசையைக் கொடுத்துள்ளார். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் பாராட்டுகள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க