வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (14/01/2019)

கடைசி தொடர்பு:09:19 (14/01/2019)

`தரமான சம்பவங்களை இனிமேல்தான் பார்க்கப்போறீங்க!’ - கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 8 டீசர் #ForTheThrone

உலக ரசிகர்களின் ஆஸ்தான சீரிஸான கேம் ஆஃப் த்ரோன்ஸின் 8வது மற்றும் கடைசி சீஸன் வரும் ஏப்ரம் 14-ம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது ஹெச்.பி.ஓ.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 8

ஒரு தொலைக்காட்சித் தொடரை ஹாலிவுட் படங்களுக்குச் சவால்விடும் வகையில் உருவாக்கிக் காட்ட முடியும் என்ற நிதர்சனத்தை உலகுக்கு உரக்கச் சொன்ன தொடர்களில் முக்கியமானது கேம் ஆஃப் த்ரோன்ஸ். பேன்டஸி வகை கதை, மிரட்டல் ட்ரீட்மென்ட், பிரமாண்டத் தயாரிப்பு எனத் தொலைக்காட்சித் தொடர்களின் தரத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்ற இந்தத் தொடர் உலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜான் ஸ்னோ

அரியணைக்கு அடித்துக்கொள்ளும் பழைய ஃபார்முலா கதைதான் என்றாலும், திரைக்கதையும் காட்சியமைப்பும் ஹாலிவுட் படங்களையும் மிஞ்சும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். தொடரின் 7 சீஸன்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், 8வது சீஸன் ஏப்ரலில் வெளியாகும்  என்று அறிவிக்கப்படிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்கள் எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீஸன் 8

இந்தநிலையில், 8வது சீஸன் ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்ததுடன், டீசர் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களில் பல்ஸ் பார்த்திருக்கிறது ஹெச்.பி.ஓ. ஜான் ஸ்னோ, சான்ஸா ஸ்டார்க், ஆர்யா ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றிருப்பது போன்ற அந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்து வருகிறது. டீசர் வெளியாகி சில நிமிடங்களிலேயே 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டீசரைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.