`விஸ்வாசம்' க்ளைமாக்ஸ் பார்த்து கதறிஅழுத குழந்தைகள்..! - நெகிழ்ச்சித் தருணம்` | child crying after watching viswasam movie climax

வெளியிடப்பட்ட நேரம்: 21:36 (14/01/2019)

கடைசி தொடர்பு:21:56 (14/01/2019)

`விஸ்வாசம்' க்ளைமாக்ஸ் பார்த்து கதறிஅழுத குழந்தைகள்..! - நெகிழ்ச்சித் தருணம்`

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'விஸ்வாசம்' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் குறித்த ரசிகர் ஒருவரது வீடியோ காட்சி, காண்போரை நெகிழச்செய்துள்ளது.

குழந்தை

சிவாவுடன் அஜித் இணைந்துள்ள நான்காவது படம், 'விஸ்வாசம்'.  `வீரம்' படத்தைத் தொடர்ந்து கிராமத்து ஸ்டைலில் மீண்டும் அஜித். ரசிகர்கள் படத்தை ஒரு திருவிழாபோல கொண்டாடிவருகின்றனர். தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் என்பதால், படம் ரசிகர்களைக் கடந்து ஃபேமிலி ஆடியன்ஸ் வரை ரீச்சாகியுள்ளது. விஸ்வாசம் குறித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுவரும் நிலையில், ரசிகர் ஒருவர்  திரையரங்கு ஒன்றில் தன் மகளுடன் வெளியிட்டிருக்கும் வீடியோ கவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அழும் குழந்தை

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், படத்தின் இறுதிக்காட்சிகள் நிறைவடைந்து அனைவரும் திரையரங்கை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, ரசிகர் ஒருவர் தன் மகளை கையில் ஏந்திக்கொண்டிருக்கிறார். அழுதுகொண்டிருக்கும் மகளை ஏந்தியபடியே அந்த ரசிகர், `விஸ்வாசம் பாத்துட்டு என் பாப்பா அழுகுறா பா... சூப்பர் படம்' என்று கூறும் வீடியோவின் பின்ணனியில், `ஆராரிராரோ' பாடல் ஒலிக்கிறது.  `இப்படி எல்லாரையும் அழ வைச்சிட்டீங்களே!' என்றபடி இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ஷேர் செய்துவருகின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் பதிவில்,` க்ளைமாக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பு ஆடியன்ஸ்களிடமிருந்தும் ஒருமித்த உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.