ஆக்‌ஷன்... சேஸிங்... பார்வையிலே மிரட்டும் விக்ரம் -வெளியானது கடாரம் கொண்டான் டீசர் | The teaser of Kadaram Kondan movie released

வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (15/01/2019)

கடைசி தொடர்பு:11:43 (15/01/2019)

ஆக்‌ஷன்... சேஸிங்... பார்வையிலே மிரட்டும் விக்ரம் -வெளியானது கடாரம் கொண்டான் டீசர்

நடிகர் விக்ரம் நடிக்கும் `கடாரம் கொண்டான்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

கடாரம் கொண்டான்

சாமி ஸ்கொயர் படத்தையடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்  `கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிக்கிறார் அக்ஷராஹாசன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரை கமல்  வெளியிட்டிருந்தார். விக்ரமின் 56-வது படமான இந்தப் படத்தை ராஜேஷ் செல்வா இயக்குகிறார்.

விக்ரம்

இந்நிலையில் தை திருநாளாம் பொங்கல்  நாளில் கடாரம் கொண்டான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  டீசர் முழுவதும் அதிரடி காட்சிகளால் நிரப்பப்பட்டுள்ளது. அதிரடி காட்டும் விக்ரம், இந்த டீசரில் தனது பார்வையாலே மிரட்டியிருக்கிறார். அவரின் லுக் அனைவரது பாராட்டைப் பெற்றுள்ளது.

விக்ரம்

இந்தப் படத்தில் நடிகர் நாசரின் மகனும் நடித்துள்ளார். அவருக்குக் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் தினத்தில் இந்த டீசர் விக்ரம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது. அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.