`இவனுக்கு இவனே தான் வில்லன்' - வெளியானது சார்லி சாப்ளின் 2 டிரெய்லர்! | Charlie Chaplin 2 trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (15/01/2019)

கடைசி தொடர்பு:19:21 (15/01/2019)

`இவனுக்கு இவனே தான் வில்லன்' - வெளியானது சார்லி சாப்ளின் 2 டிரெய்லர்!

பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். 

சார்லி சாப்ளின்

`குலேபகாவலி' `மெர்குரி' `லட்சுமி' படங்களைத் தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் புதிய படம் சார்லி சாப்ளின் 2. கடந்த 2002-ம் ஆண்டில் பிரபு மற்றும் பிரபு தேவா இணைந்து நடித்து வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாவது பாகம் இது. இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார். படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அம்ரீஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். கிராமிய கலைஞர்கள், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இணைந்து பாடிய `என்ன மச்சா' பாடல் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடல் முன்னதாகவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் பிரபு, ஆதா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சௌந்தராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இம்மாதம் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளநிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.