`அவங்க எனக்கு ஓகே சொல்லிட்டாங்க..!’ -நடிகர் விஷாலின் திருமண அறிவிப்பு | Actor Vishal announced about his marriage

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (16/01/2019)

கடைசி தொடர்பு:12:44 (16/01/2019)

`அவங்க எனக்கு ஓகே சொல்லிட்டாங்க..!’ -நடிகர் விஷாலின் திருமண அறிவிப்பு

டோலிவுட் வட்டாரம் அதிகம் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு வந்துவிட்டது. ஆம் நடிகர் விஷால் தன் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.  

விஷால்
 

நடிகர் விஷாலுக்கும், தெலுகு நடிகை அனிஷா ரெட்டிக்கும் காதல் எனச் சில நாள்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. காதல் விஷயம் கசிந்துவிட்டதைத் தொடர்ந்து விஷாலும், அனிஷாவும் அதிகாரபூர்வமாகவே ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் அறிவித்துவிட்டனர்.   `மகிழ்ச்சி.. பெருமகிழ்ச்சி.. அவங்க எனக்கு ஓகே சொல்லிட்டாங்க.. என் வாழ்வின் மிகப்பெரிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறது. 
திருமணத் தேதியை சீக்கிரமே அறிவிப்பேன்’’ என்று விஷால் மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

விஷால்

இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக விஷாலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஏப்ரல் மாதத்தில் நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடத்தில் விஷால் - அனிஷா திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

அனிஷா -வின் இன்ஸ்டாகிராம் பதிவில்  ``புதிய வாழ்க்கைக்குள் கால் பதிக்கிறேன். என்னோடு பயணிக்க, என் சுகத் துக்கங்களில் பங்குபெற என் காதலை நான் சந்தித்துவிட்டேன். இவருக்குக்காகதான் என் வாழ்க்கை முழுவதும் காத்துக்கொண்டிருந்தேன்’’ என்று நெசிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க