`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி! | vijay sethupathi says about movie 'kanne kalaimaaney'

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (16/01/2019)

கடைசி தொடர்பு:18:30 (16/01/2019)

`கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி!

`தென்மேற்குப் பருவகாற்று' படத்தின் மூலமாக விஜய் சேதுபதியை ஹீரோவாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. தற்போது விஜய் சேதுபதியை வைத்து `மாமனிதன்’ என்ற படத்தையும் எடுத்து வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்து தயாரிக்கவும் செய்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்தப் படத்தின் இசைக்காக யுவனுடன் இளையராஜா, கார்த்திக்ராஜா ஆகிய இருவரும் கைகோத்துள்ளனர். தேனியில் பரபரப்பாகப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சீனு ராமசாமியின் 'கண்ணே கலைமானே' படத்தை விஜய் சேதுபதி பார்த்துள்ளார். உதயநிதி, தமன்னா நடித்திருக்கும் இந்தப் படம் மண்வாசனையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.

கண்ணே கலைமானே படத்தில் ஒரு காட்சி

படம் பார்த்து முடித்தவுடன் நெகிழ்ச்சியுடன் சீனு ராமசாமியைக் கட்டியணைத்து கண் கலங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. இதுமட்டுமல்லாமல் 'விடுதலை சிறுத்தை கட்சி'யின் தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்தரசனும் படம் பார்த்துவிட்டு மனம் திறந்து இயக்குநர் சீனு ராமசாமியைப் பாராட்டியுள்ளார். சில நாள்களுக்கு முன்புதான் 'கண்ணே கலைமானே' படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க