டிசம்பர்-25, 2003 நயன்தாராவின் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். அவருடைய முதல் திரைப்படமான ‘மனசினக்கரே’ வெளியான தினம். அப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி நயனின் ரசிகர்கள் சோஸியல் மீடியாவை அலறவிட்டனர். மாஸ் ஹீரோக்களுக்குச் செய்வதுபோல #15yearsofnayanism என்கிற ஹேஷ்டேகில் அவருடைய அருமை பெருமைகளை, சாதனைகளை, வாழ்த்துகளைக் குவித்துத் தள்ள... அது நாள்முழுக்க டிரெண்டானது. லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா!

பாலிவுட் பாட்ஷாக்களின் படங்கள் எல்லாம் இந்த ஆண்டு முழுக்க மண்ணைக் கவ்வ, சத்தமில்லாமல் வெளியாகி வெற்றி பெற்றது ‘அந்தாதுன்’ என்ற திரைப்படம். ஆயுஷ்மான் குரானா ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை இயக்கியது திக்திக் த்ரில்லர்களுக்குப் பெயர்போன ஸ்ரீராம் ராகவன். ‘இந்தப் படத்தை நான் ரீமேக் செய்தால் எப்படி இருக்கும்?’ என ட்விட்டரில் நடிகர் சித்தார்த் நடத்திய ஓட்டெடுப்புக்கு ‘சூப்பரப்பு’ என வாக்குகளைக் குவித்தார்கள் ரசிகர்கள். ‘கண்டிப்பா பண்ணலாம் மச்சான்’ என ஆயுஷும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். ஆயுஷ்மான் பவ!

‘Get Out’ 2017-ல் வெளியாகி, சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்ற படம். ஹாரர் படங்களின் வழியாகவும் அரசியல் மெசேஜ் சொல்லலாம் என அந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார் இயக்குநர் ஜோர்டன் பீலே. அப்போதே அவரின் அடுத்த படம் குறித்த பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அது அத்தனைக்கும் தீனிபோடுகிறது அவரின் லேட்டஸ்ட் படமான ‘Us’ படத்தின் டிரெய்லர். கடற்கரை வீட்டில் ஒரு குடும்பத்திற்கு நடக்கும் திகில் சம்பவங்கள்தான் கதை. பட ரிலீஸுக்காக மரண வெயிட்டிங்கில் இருக்கிறார்கள் ரசிகர்கள். பேமிலி பேய்ப்படமா இருக்குமோ!

‘பாகமதி’ படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடிக்கவிருக்கும் புதிய படம் ‘சைலன்ஸ்.’ தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகிவரும் இப்படத்திற்காகக் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார் அனுஷ்கா. ‘வஸ்தாடு நா ராஜா’ படத்தை இயக்கிய ஹேமந்த் மதுக்கார் இயக்கும் இப்படத்தில், வித்தியாசமான ரோலில் நடிக்கிறார் ‘ஸ்வீட்டி.’ மார்ச் மாதம் அமெரிக்காவில் படப்பிடிப்புக்குச் செல்கிறது படப்பிடிப்புக்குழு. படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் மாதவனும் நடிக்கிறார். தேவசேனா பராக்

முதன்முறையாக அண்டார்ட்டிகா பனிப்பிரதேசத்துக்குத் தனி ஆளாகப் பயணம் செய்து கெத்து காட்டியிருக்கிறார் 33 வயதான கோலின் ஓ பிராடி. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் 54 நாள்கள் 1,600 கி.மீ பயணம் செய்து அண்டார்ட்டிகாவில் ‘டென்ட்’ போட்டுள்ளார். எப்படி இந்தப் பயணம் சாத்தியமென அனைவரும் வாய்பிளக்க, ‘ஓட்ஸ் சாப்பிட தண்ணீரை சூடுபடுத்திக்கொண்டிருக்கிறேன்’ என இன்ஸ்டாவில் போட்டோ போட்டு அசால்ட் காட்டினார் கோலின். ஜில்லுனு ஒரு பயணம்!

ஜெயலலிதாவின் பயோபிக் அடுத்து வெப் சீரிஸாகவும் தயாராகி வருவதுதான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக். 20 எபிசோடுகளைக் கொண்ட இந்த சீரிஸில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், எம்.ஜி.ஆர் வேடத்தில் மலையாள நடிகர் இந்திரஜித்தும் நடிப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த வெப் சீரிஸை கெளதம் மேனன் இயக்கவிருக்கிறாராம்!  அச்சம் என்பது மடமையடா