`திருமதி செல்வம்' பாக்கியத்தை மக்கள் இன்னும் மறக்கலை!- சின்னத்திரை நடிகை கெளதமி | serial actress gowthami talks about her acting experience

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (18/01/2019)

கடைசி தொடர்பு:12:40 (18/01/2019)

`திருமதி செல்வம்' பாக்கியத்தை மக்கள் இன்னும் மறக்கலை!- சின்னத்திரை நடிகை கெளதமி

சின்னத்திரை கெளதமி


`திருமதி செல்வம்' புகழ் நடிகை கெளதமி, சிறிய இடைவெளிக்குப் பிறகு சன் டிவி `ப்ரியமானவள்' சீரியலில் நடிக்கிறார். அந்த அனுபவம் குறித்துப் பேசுகிறார்.

``என் கரியர்ல `திருமதி செல்வம்' சீரியல்தான் பெரிய மைல்கல். அந்தப் பாக்கியம் கேரக்டரை மக்கள் இன்னும் மறக்கலை. அந்த கேரக்டரின் தாக்கத்திலிருந்து நானும் முழுசா வெளிவரலை. அந்த சீரியலுக்குப் பிறகு பல சீரியல்கள்ல நடிச்சுட்டேன். ஒரு சின்ன  ஓய்வுக்காக சில மாதமா எந்த புராஜெக்ட்லயும் கமிட்டாகலை. இப்போ `ப்ரியமானவள்' சீரியல்ல நடிக்க வந்திருக்கிறேன். இதிலும் வழக்கம்போல நெகட்டிவ் ரோல்தான். எனக்கு அடையாளம் பெற்றுக்கொடுத்தது நெகட்டிவ் ரோல்தான். ஆனா, காமெடி ரோல்ல பெயர் வாங்க ஆசைப்படறேன். தொடர்ந்து நீண்டகாலமா சீரியல்கள்ல நடிக்கிறேன். ஆனாலும், ஒருநாளும் நடிப்பு போதும்ங்கிற எண்ணம் வந்ததேயில்லை" என்பவர், மேடை நாடக நடிகரும்கூட.  

`திருமதி செல்வம்' கெளதமி

``மேடை நாடகம் மற்றும் சீரியல் இரண்டும் வேறு வேறு களம். ஒத்திகைக்குக் குறைவான நேரம் மட்டுமே இருக்கும். மேடையில கவனத்துடன் ஒரே நேரத்தில் தவறில்லாமல் நடிச்சாகணும். சவாலானது என்றாலும், நம்ம நடிப்புத் திறமையை வெளிப்படுத்த மேடை நாடகங்கள்தான் சரியான களம். மக்களின் அங்கீகாரம் உடனடியாக் கிடைச்சுடும். இதனால் பெரிசா வருமானம் கிடைக்காது. ஆனா, கிடைக்கும் மனநிறைவு தனித்துவமானது. சீரியல்ல பல டேக் எடுத்துப் பொறுமையுடன் நடிக்கலாம். புகழ் கிடைக்கும், நல்ல வருமானம் கிடைக்கும். இதனால் கிடைக்கும் மனநிறைவும் வேறு விதமானது. இரண்டு களத்திலும் மனநிறைவுடன் நடிக்கிறேன்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.