2019 -ல் `பராக்' சொல்லும் அனிமேஷன் படங்கள்! | Animation Movies to be release in 2019

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (18/01/2019)

கடைசி தொடர்பு:15:00 (18/01/2019)

2019 -ல் `பராக்' சொல்லும் அனிமேஷன் படங்கள்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் `அட' போட வைத்து ஆச்சர்யப்படுத்துவது அனிமேஷன் படங்கள். 2019-ம் ஆண்டு எதிர்பார்ப்புகளுடன் `பராக்!' சொல்லவிருக்கும் அனிமேஷன் படங்கள் இதோ.

 யூரி! ஆன் தி ஐஸ். ஐஸ் அடொலெசென்ஸ் 
      
இ‌ந்த சீரியல் ஏற்கெனவே விளையாட்டுத் துறையின் பாலின உறவைப் பற்றிச் சித்திரித்து பல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. இந்த ஆண்டு பலத்த எதிர்பார்ப்புகளுடன் களமாட உள்ளது.

அனிமேஷன்

ஃப்ரோசன் 2 
  
2013-ல் முதல் பாகம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் 1.27 பில்லியன் டாலர் வசூல் செய்து ஹிட் அடித்த படம் ஃப்ரோசன். ஆறு வருடத்துக்குப் பின் தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது. 

ப்ளே மொபிள்

அனிமேஷன்

இதன் டிரெய்ல‌ர் நகைச்சுவையுடன் சாகசம் க‌ல‌ந்த படமாக  இருக்கும் என எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 7-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஆகஸ்ட்டில் மரண மாஸ் இருக்கிறது. 

லீகோ -2   

 2014-ல் வெ‌ளியானது லீகோ முதல் பாகம்.  5 ஆண்டுகள் கழித்து 8 பிப்ரவரி 2019 இரண்டாம் பாகம் வர இருக்கிறது. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்ஸிங் லிங்க் 
   

அனிமேஷன்


இது ஒரு ஸ்டாப் மோஷன் அனிமேடட் காமெடி திரைப்படம். கிறிஸ் பட்லர் இதை எழுதியும் இயக்கியும் உள்ளார். லைகா நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. ஹுக் ஜாக் மேன், எம்மா தாம்சன் ஆகியோர் பின்னணி குரல் பேசியுள்ளார்கள்.

ஹவ் டூ ட்ரெய்ன் யுவர் டிராகன் 3

 டீண் டிப்லாய்ஸ் இதற்கு முன் இயக்கிய இரண்டு படங்களுக்காக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கபட்டார். இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் சக்கை போடு போட்ட நிலையில் 3-ம் பாகம் வெளிவர உள்ளது. 

இந்தாண்டு குழந்தைகளுக்கும் அனிமேஷன் பட ரசிகர்களுக்கும் ரகளையான ஆண்டாக இருக்கப் போகிறது.