Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ந்திய சினிமாவில் இது மேரேஜ் சீஸன்... பிரியங்கா சோப்ரா, தீபிகா வரிசையில் அடுத்து எமி ஜாக்சனுக்கும் கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது. மில்லியனர் தொழிலதிபரான ஜார்ஜ் என்பவரைத் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் எமி. இதற்கான நிச்சயதார்த்தமும் நடந்துமுடிந்துவிட்டதாம். ஜாம்பியாவில் இப்போது தன் காதலரோடு சுற்றுலாவில் இருக்கும் எமி, அங்கே தன்னுடைய நிச்சயதார்த்த மோதிரத்தோடு இருக்கிற படத்தை வெளியிட்டு, திருமணம் குறித்து அறிவித்துள்ளார். மெருசலாக வாழ வாழ்த்துகள் தோழி!

இன்பாக்ஸ்

ச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகாலப் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கர். தன் 87வது வயதில் சென்ற வாரம் உடல்நலக்குறைவால் காலமானார். இதில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அப்செட். வினோத் காம்ப்ளி, பிரவீன் அம்ரே, அமோல் மஜூம்தார், லால்சந்த் ராஜ்புத், பராஸ் மாம்ப்ரே என இந்திய அணிக்காக விளையாடிய எண்ணற்ற வீரர்களை உருவாக்கிய துரோணாச்சாரியார் அச்ரேக்கர். அவருடைய இறுதி அஞ்சலியில் கலந்துகொண்ட சச்சின் கண்ணீரோடு தன் குருவின் உடலைச் சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார். நன்றிகள் சார்!

இன்பாக்ஸ்

சிம்பு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார் என்று பரபரக்கிறது கோலிவுட். பிப்ரவரி தொடக்கத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் `மாநாடு’ படம் தொடங்கும் என்கிறார்கள். அதையடுத்து சீமான் இயக்கத்தில் ஓர் அரசியல் ஆக்‌ஷன் படத்திலும் கமிட் ஆகவிருக்கிறாராம். இந்தப்படத்தில் முதல்முறையாக ஒரு புரட்சிகர மருத்துவராகவும் தோன்றவிருக்கிறாராம் சிம்பு. சிறப்பா வாங்க!

இன்பாக்ஸ்

‘வனிதா மதில்’ நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பேசுபொருளானது இந்தப் பெயர். காரணம், கேரளப் பெண்கள். ‘சபரிமலைக்குள் நுழைய பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ என்பதை வலியுறுத்தி கேரள ஆளுங்கட்சி சார்பாக நடந்த இந்த மனிதசங்கிலிப் போராட்டம் தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. காசர்கோடு தொடங்கி திருவனந்தபுரம் வரை 620 கி.மீ தூரம் நீண்ட இந்தப் போராட்டத்தில் ஐம்பது லட்சம் பெண்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். உலக அளவில் நடந்த மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாகப் பெயர் பெற்றிருக்கிறது வனிதா மதில். கேர்ள்பவர்!

இன்பாக்ஸ்

நிலவில் இதுவரை எந்த விண்கலமும் இறங்கிடாத பகுதியில் தன்னுடைய விண்கலத்தைத் தரையிறங்கச்செய்து சாதனை படைத்திருக்கிறது சீனா. சாங்’ஈ-4 என்கிற இந்த விண்கலம் நிலவின் இருள் நிறைந்த பகுதியில் இறங்கி ஆய்வுகள் செய்யத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அப்பகுதியின் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது. அடுத்த ஆண்டு சாங்’ஈ-4 என்கிற விண்கலத்தை அனுப்பி நிலவிலிருந்து சாம்பிள்கள் எடுத்துவருகிற ஏற்பாடுகளையும் செய்யவுள்ளது சீனா. முந்தும் சீனா