`இனி நடிப்பில் மட்டுமே முழுக் கவனம்!’ - ரூட்டை மாற்றிய விஜய் ஆண்டனி | Actor vijay antony change his working style

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (19/01/2019)

கடைசி தொடர்பு:15:09 (19/01/2019)

`இனி நடிப்பில் மட்டுமே முழுக் கவனம்!’ - ரூட்டை மாற்றிய விஜய் ஆண்டனி

`சுக்ரன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, பல சிறந்த ஆல்பங்களை தமிழ் சினிமாவுக்குக் கொடுத்திருக்கிறார். அதேபோல, அவர் நடிகராக மாறிய பிறகும் `நான்’, `சலீம்’, `இந்தியா பாகிஸ்தான்’, `பிச்சைக்காரன்’ என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்துவந்தார். 

விஜய் ஆண்டனி

ஆனால், ’எமன்’ படத்திலிருந்து அவரது படங்கள் எதிர்பார்த்தபடி போகவில்லை. இதற்குக் காரணம், அவரது வேலைப்பளுவாக இருக்கலாம் என்றும் பேச்சுகள் வந்தன. அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரிப்பதோடு, அந்தப் படங்களுக்கு இசையமைப்பது, படத்தொகுப்பு செய்வது மற்றும் கலர் கரெக்‌ஷன் செய்வது எனப் பல வேலைகளையும் செய்துவந்தார். இதுகுறித்து அவர் சில பேட்டிகளில், இனி நான் நடிக்கும் படங்களைப் பெரும்பாலும் நான் தயாரிக்க மாட்டேன். முடிந்த அளவுக்கு வேற ஒரு இசையமைப்பாளரையும் படத்தொகுப்பாளரையும் எனது படங்களுக்கு கமிட் செய்வேன். இனி, நடிப்புக்கு அதிக கவனம் செலுத்துவேன்’ எனக் கூறியிருந்தார். 

பிரணவ், மோகன் ராஜா

அவர் கூறியது போலவே, சமீபத்தில் வெளியான அவரது புதுப் பட அறிவிப்பில் அந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. `தமிழரசன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மேலும், படத்தொகுப்பை புவன் ஸ்ரீனிவாசன் செய்ய உள்ளார். இந்தப் படத்தில், இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் மோகனும் நடிக்கிறார்.