Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/karthekarna

வாழ்க்கைல ஜெயிக்கிறது, சாதிக்கறதுலாம் இருக்கட்டும். இந்தக் குளிர்காலத்துல, குளிக்கிறதுக்கே பயங்கர மனோதிடமும், சுய ஆறுதலும் தேவைப்படுதே. 

facebook.com/saravana karthikeyanc

பொய்களால் காதல் செய்கிறோம். அப்புறம் மெய்களால். 

வலைபாயுதே

facebook.com/sa.na.kannan

இளையராஜாவிடம் மாணவி கேள்வி: ஐயா, உங்களுக்குப் பிடிச்ச இசைக்கருவி எது?

(கூட்டத்திலிருந்து கிடார், வயலின் எனச் சொல்லிப் பார்க்கிறார்கள். கையை அசைத்து மறுக்கிறார். பிறகு பதில் சொல்கிறார்.)

என் மனசு.

facebook.com/anfa.athi.1

எவரும் வாசிக்க மாட்டார்கள், விமர்சிக்கமாட்டார்கள் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கையிலேயே தைரியமாக இஷ்டத்துக்கு புத்தகங்கள் எழுதப்பட்டுக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

facebook.com/yuvathamizh

பிளாஸ்டிக் தடையால் தமிழ் கணவர் சமூகத்துக்கு தர்மசங்கடம்.

மல்லிகைப்பூவை வாழை இலையில் மடித்துத் தருகிறார்கள். அல்வாவை மந்தாரை இலையில் வைத்துத் தருகிறார்கள். அம்மாவின் சென்ஸார் கண்களுக்குச் சிக்காமல் இந்தச் சரக்குகளைப் பொண்டாட்டி வசம் கடத்துவதற்குள் பெரிய ரோதனையாகிப்போகிறது :( 

twitter.com/amuduarattai

வலைபாயுதே

மட்டன் கடையில் நாம் வாங்கும் போது, மட்டனாக இருந்தவையெல்லாம், வீட்டில் மனைவி பார்க்கும் போது, எப்படி கொழுப்பும், எலும்புமாக மாறுகிறது என்பதுதான் புரியவில்லை.

twitter.com/gips_twitz

சீமான் கட்சி தொடங்கி ஒன்பது வருசத்துல ஒரு லட்சம் முறை கொள்கையும் கோஷ்டியும் மாத்திட்டாரு

தமிழகத்தின் அடுத்த வைகோ சீமான்

twitter.com/shivaas_twitz

சலூனில் முடி வெட்டும் போது தூங்கி வழிபவர்களை எழுப்புவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதோ,

தண்ணீர் பீய்ச்சும் சாதனம்..?!

வலைபாயுதே

twitter.com rahimgazali

சிம்புவை வெச்சு மூணு படம் எடுக்கப் போறேன். அதோடு பலபேரு நெஞ்சு வெடிச்சு செத்துப் போய்டுவாங்க - சீமான்

சிம்புவை வெச்சு ஒரு படம் முடிப்பதுக்குள் நீங்க நெஞ்சு வெடிச்சு சாகாமல் இருந்தால் சரிதான்.

twitter.com/amuduarattai


காக்கா மட்டும் கொஞ்சம் கலரான பறவையாக இருந்திருந்தால், அதைக் கொன்று தின்றே அழித்தி ருப்போம்.

twitter.com/Thaadikkaran


அடுத்த நாள் லீவு எடுக்குற மாதிரி இருந்துச்சுன்னா அதுக்கு முந்தைய நாள் ஒரு மனுசன் வேலை பார்ப்பான் பாரு, அதே மாதிரி வருசம் முழுசும் வேலை பார்த்திருந்தா எங்கிட்டோ போயிருப்பான்..!

twitter.com/ajmalnks

திரைப்படமாக உருவாகிறது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு - செய்தி

கதை என்னன்னா டீக்கடையில் ஆரம்பித்து வாயில் வடை சுட்டு பதவியைப் பிடித்து ப்ளைட்டில் சுற்றி, படித்தவர்களை பக்கோடா போட வைப்பதில் முடிவடைகிறது படம்.

வலைபாயுதே

facebook.com/saravanakumar.lakshmi

தேநீர் அருந்தியபடியே மாண்புமிகு முதல்வர் ஐயாவின் எழுச்சியுரையை முழுமையாகக் கேட்டேன். அர்த்தமுள்ள ஆழமான உரை. உலகத் தலைவர்களின் மேற் கோள்களை எல்லாம் அவர் எடுத்து வைத்த பாங்கு, சொல்லின் செல்வர் என்றே சொல்லலாம். புத்தகக் கண்காட்சி ஏற்பாடுகள் குறித்தும் அற்புதமாகப் பேசினார்.

தமிழகத்தில் உள்ள நூலகங்களில் நூல்களின் எண்ணிக்கை எட்டுக் கோடியே பதிமூன்று லட்சம் என்றும், நூலக வாசக உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டுக் கோடியே நாற்பத்தைந்து லட்சம் என்றும் அவர் சொன்ன புள்ளிவிவரம் கேட்டுதான் ஒரு நொடி `ங்கொப்பன் மவனே ஒவ்வொரு தமிழனும் நூலக உறுப்பினர்தான் போலயே’ என உடல் சிலிர்த்தது.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சகோதரி அடுத்த வருடமும் எடப்பாடி ஐயாவே வந்து கண்காட்சியைத் தொடக்கி வைக்க வேண்டுமெனத் தவதாயப்பட்டார். அதைவிடவும் முக்கியமான இன்னொரு தகவல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன் படங்களில் புத்தகம் வாசிப்பது போன்று அடிக்கடி நடிக்கக் காரணம் தன்னைப்போல் இளம் தலைமுறை படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் என்றொரு கண்டுபிடிப்பையும் ஐயா இன்று உலகிற்கு அறிவித்தார். அநேகமாக தமிழ் நாட்டில் வீட்டிற்கு ஒரு எழுத்தாளன் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
 
twitter.com/rahimgazali

மஞ்சப்பை வாழ்வுதனை பிளாஸ்டிக் கவ்வும். முடிவில் மஞ்சப்பையே வெல்லும்.

twitter.com/oorkkavalaan


தேடலில் மிகவும் கொடுமையானது

`செலோடேப்’பின் நுனியைத் தேடுவது.

twitter.com/sweetsudha1


`வாரண்டி பீரியட்’ என்பது, பொருள் பழுதடைவதற்கு சற்றே முன்பு முடிந்துபோவது!

twitter.com/MJ_twets

வலைபாயுதே

உன்கிட்ட பிடிச்சதே இதான் எனும் போது தொடங்கும் காதல், வர வர நீ செய்ற எதுவுமே எனக்குப் பிடிக்கல எனும் இடத்தில் முடியும்!

twitter.com/udhayamass1


தம் அடிக்கிற சீன்ல `NO SMOKING’

போடுற மாதிரி, காமெடி சீன்ல

`நகைச்சுவைக் காட்சி’ன்னு போடுங்கடா...

சிரிக்கிறதுக்கு வசதியா இருக்கும்!

twitter.com/gips_twitz


மோடி வெளிநாடு செல்வதால்தான் மானம் மரியாதை கிடைத்துள்ளது - தமிழிசை

அப்ப இனிமேல் வெளிநாடு போயி மானத்தை வாங்கிய மோடின்னு சொல்லுங்க.

twitter.com/ItsJokker

எவ்வளவு `கண்டிப்பான அப்பா’வையும் `காமெடியான தாத்தா’வாக மாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் பேரக்குழந்தைகள்...!

twitter.com/thoatta


பார்க்க பார்க்க சலிக்காததுன்னு யானை, ரயில், கடல் அலைன்னு ஒரு லிஸ்ட் இருக்கும்ல அதுல சாய் பல்லவி டான்ஸையும் சேர்த்துக்கலாம் :-/

சைபர் ஸ்பைடர்

இதழ் முழுக்க ஒன்லைனர்கள்: பாலு சத்யா