'சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் porn star யார்? - தியாகராஜன் குமாரராஜா பதில் | Ramya Krishnan plays a porn star role in 'Super Deluxe' movie

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (19/01/2019)

கடைசி தொடர்பு:17:40 (19/01/2019)

'சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் porn star யார்? - தியாகராஜன் குமாரராஜா பதில்

விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில், ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது சமீபத்திய பேட்டியில் தெரியப்படுத்தியிருக்கிறார். இப்படத்தில் சமந்தா, ஃபகத் ஃபாசில் மற்றும் மிஸ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். கதையை தியாகராஜன் குமாரராஜாவுடன் சேர்ந்து மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே சேகர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.

கடந்த டிசம்பர் 2004-ம் ஆண்டு நடந்த சுனாமியை மையமாகக்கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படம் வெவ்வேறு தளங்களில் வசிக்கும் நான்கு பேரின் கதைகளைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் குறிப்பிட்டிருக்கின்றனர். சுமார் மூன்று மணிநேரம் கொண்ட இப்படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

ரம்யா கிருஷ்ணன்

இதில், ரம்யா கிருஷ்ணனுக்கு 'பார்ன் ஸ்டார்' கதாபாத்திரம் என்று இயக்குநர் குறிப்பிட்டிருக்கிறார். இப்படத்தில் வரும் 'மல்லு அன்கட்' எனும்  பார்ன் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இக்கதாபாத்திரத்தில் முதலில் நதியா நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.