'இளையராஜா 75' நிகழ்ச்சியில் ரஜினி, கமல்! - தயாரிப்பாளர் சங்கம் விறுவிறு ஏற்பாடு | rajini, kamal to garner the ilayaraja 75 show with their presence

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (19/01/2019)

கடைசி தொடர்பு:18:00 (19/01/2019)

'இளையராஜா 75' நிகழ்ச்சியில் ரஜினி, கமல்! - தயாரிப்பாளர் சங்கம் விறுவிறு ஏற்பாடு

தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், 'இளையராஜா 75' விழா பிரமாண்டமான முறையில் தயாராகிவருகிறது. பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் பெரும் விழாவாக நடக்க உள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என தென்னிந்தியத் திரையுலகின் முக்கியப் பிரமுகர்களை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விழாக் குழுவினர் நேரில் அழைப்பு விடுத்துள்ளனர்.

ilayaraja 75

இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ், பொருளாளர் SR பிரபு, 'இளையராஜா 75' விழாக் குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்திலும், 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவிருக்கும் கமல்ஹாசனை அவரது அலுவலகத்திலும் நேரில் சந்தித்து விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ரஜினி மற்றும் கமல் இருவரும் நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதியளித்திருக்கின்றனர் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இளையராஜா 75

சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு, 'புக் மை ஷோவில்'  முன்பதிவு செய்யலாம்.  பிப்ரவரி 2-ம் தேதி தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் இளையராஜாவுக்காக நடத்தும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். பிப்ரவரி 3-ம் தேதி, இளையராஜா தனது குழுவுடன் நடத்தும் இசைவிழா நடைபெற உள்ளது. ரஜினி, கமல் இருவரும் சென்ற ஆண்டு மலேசியாவில் நடந்த நடிகர் சங்க விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.