`எதற்கும் அஞ்சாத, எதற்கும் வருத்தப்படாதவர் ஷகீலா!'- நடிகை ரிச்சா சத்தா | Richa Chadha Launches The Quirkiest Calendar For 2019 on shakeela films

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (19/01/2019)

கடைசி தொடர்பு:15:02 (21/01/2019)

`எதற்கும் அஞ்சாத, எதற்கும் வருத்தப்படாதவர் ஷகீலா!'- நடிகை ரிச்சா சத்தா

90-களின் அடல்ட் படங்களுக்கு முகவரியாக இருந்த நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகிவருவது நமக்குத் தெரிந்ததே. இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் ரிச்சா சத்தா ஷகீலாவாக நடிக்கும் இத்திரைப்படத்தின் புரொமோஷனுக்காக ஒரு புது யுக்தியைப் படக்குழுவினர் கையாண்டுள்ளனர்.

shakeela First look

கற்பனையாக உருவாக்கப்பட்ட 12 திரைப்பட போஸ்டர்கள் உள்ளடக்கிய 2019-ம் ஆண்டுக்கான காலண்டர் ஒன்றை #2019ShakeelaKeNaam ஹாஷ்டாக்குடன் வெளியிட்டுள்ளனர். அடல்ட் படங்களுக்கே உண்டான குறும்புத்தனமான டைட்டில்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காலண்டரில் ரிச்சா, ஷகீலாவைப்போலவே போஸ்கொடுத்துள்ளார். மேன் ஈட்டர், பாப்பி பப்பி, சத்ரிகே பீச்சே க்யா ஹை, என 12 மாதங்களுக்கும் 12 படங்களின் போஸ்டர்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

shakeela ke naamshakeela ke naam

இதுகுறித்துப் பேசும்போது, ரிச்சா "இதை நாங்கள் 90-களின் பல்ப் படங்களுக்கு ஒரு சமர்ப்பணமாகத்தான் உருவாக்கியுள்ளோம். பார்ப்பவர்களுக்கு உடனே சிரிப்பைத் தூண்டும் எண்ணமும், அந்த ரெட்ரோ கால நிகழ்வுகளும் நினைவுக்கு வரவேண்டும் என்ற எண்ணமும்தான், இந்தக் காலண்டரை வெளியிட ஒரு உந்துதலாக இருந்தது" என்றார்.

ரிச்சா சத்தா

மேலும், ஷகீலாவைப் பற்றி "இந்திரஜித் இந்தக் கதையை என்னிடம் கூறியவுடனேயே ஷகீலாவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்ற ஆர்வம் எனக்குள் எழுந்தது" என ரிச்சா கூறினார். அது மட்டுமல்லாமல், இந்தப் படத்தில் ஒப்பந்தமானதும் ஷகீலாவை நேரில் சந்தித்து, அவரிடம் ஆலோசனைகள் பெற்ற அனுபவத்தையும் கூறினார்.

ஷகீலா

"எதற்கும் அஞ்சாத, எதைப்பற்றியும் வருத்தப்படாத ஒரு பெண்ணாகவே எனக்குத் தெரிந்தார். அடல்ட் சினிமாவில், அவருடைய தொடக்க கால கஷ்டங்களையும், அதன்பின் அவர் உச்சத்தைத் தொட்ட காலத்தைப் பற்றியும், தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் நிறையவே பகிர்ந்துகொண்டார்" என ரிச்சா பகிர்ந்தார்.