'ரெமோ' இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி! | director bhagyaraj kannan will direct karthi

வெளியிடப்பட்ட நேரம்: 21:14 (19/01/2019)

கடைசி தொடர்பு:21:14 (19/01/2019)

'ரெமோ' இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி!

அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'தேவ்'. இதில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் 14-ம்ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

கார்த்தி

தற்போது, 'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடித்துவருகிறார், கார்த்தி. ஹீரோயினே இல்லாத இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி முதல் வாரத்திற்குள் இதன் படப்பிடிப்பை நிறைவுசெய்ய உள்ளனர். இதைத் தொடர்ந்து, 'ரெமோ' பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. காதலை மையமாக வைத்து 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன், இம்முறை அக்‌ஷன் கதையுடன் களமிறங்க இருக்கிறார். மார்ச் முதல் வாரம் இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது. இப்படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் உள்ளிட்டோரைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க