பிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ! | vijay new movie pooja video has been released

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (20/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (20/01/2019)

பிரம்மாண்டமாக நடந்த `விஜய் 63’ படப்பூஜை - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ!

சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதற்கான வீடியோ ஒன்றையும் படக்குழ வெளியிட்டுள்ளது.

பூஜை

`சர்கார்’ படத்துக்குப்பிறகு இயக்குநர் அட்லியுடன் இணைகிறார் விஜய். `தெறி’ `மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்ட் மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா.

`பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த கதிர் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.  இவர்களுடன் ஆனந்த ராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதற்கான வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு படம் திரைக்குவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.