இந்திய சினிமா உலகில் லேட்டஸ்ட் டிரெண்ட் ‘பயோபிக்’ படங்கள். சமீபத்தில் ‘என்.டி.ஆர் கதாநாயகடு’ படம் அக்கட தேசத்தில் காரத்தை எகிறவிட்டிருக்கும் நிலையில், வெகுவிரைவில் டாப் மோஸ்ட் அரசியல் பிரபலங்களான நரேந்திர மோடி, மன்மோகன் சிங், ஜெயலலிதா, பால் தாக்கரே, ராஜசேகர் ரெட்டி என்று வரிசையாக ‘பாலிடிக்ஸ் பயோபிக்’ படங்கள் பட்டாசு வெடிக்கக் காத்திருக்கின்றன. சூடான பொங்கலைச் சாப்பிட்டுக்கொண்டே இதைப் படியுங்கள்... வறுத்த மொறுமொறு மசாலா முந்திரி சாப்பிட்ட எஃபெக்ட் கிடைக்கும்!

தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்

2014-ல் ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ புத்தகம் வந்தது நினைவிருக்கிறதா? அதை அடியொற்றி எடுக்கப்பட்ட படமே, ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’. நேருவுக்கு அடுத்து இந்தியாவை அதிகக் காலம் ஆண்ட மன்மோகன் சிங்கின் பயோபிக். சோனியாவின் முன்னால் பவ்யமாக அமர்ந்திருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், “நான் வேண்டுமானால் ராஜினாமா செய்துவிடவா?” என்று கேட்கும் காட்சி ஒன்று போதும், படத்தைப் பற்றி காங்கிரஸ் கவலைப்பட. ‘காங்கிரஸின் கறுப்புப் பக்கங்களைக் காட்டும் காட்சிகள் அதிகம். கதர் சட்டைக்காரர்களைக் கதறவிட்டிருக்கிறது படம்’ என்கிறார்கள். இதனால், பயங்கரக் கடுப்பில் இருக்கிறது காங்கிரஸ். “காங்கிரஸ் தலைவர்களைத் தவறாக சித்திரிக்கிறது படம். படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று பிரச்னையும் கிளம்பியது. ஆனால், பி.ஜே.பி இதற்கு வேறு ஏதேனும் பதிலடி கொடுத்திருக்கலாம். ‘கருத்துரிமையை நசுக்குகிறது காங்கிரஸ்’ என்று போட்டுத் தாக்கியது, தாங்க முடியலடா சாமி! ஆனாலும், காங்கிரஸுக்கு எதிராகப் படம் வருவது இது ஒன்றும் புதிது அல்ல. எமர்ஜென்சியைப் பேசிய ‘அமு’, சீக்கியர் கலவரத்தைப் பேசிய ‘31st October’ போன்ற படங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே வந்திருக்கின்றன. இத்தனை சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டு, மன்மோகன் சிங்காகவே தெறிக்கவிட்டிருக்கிறார் அனுபம்கெர். நளின நடை, மென்குரல் என அப்படியே அச்சு அசல் மன்மோகனாகவே மாறியிருக்கிறார் மனிதர்!

தாக்கரே...

‘ஹிந்து ஹிருதய் சாம்ரேட் பாலேசாகிப் தாக்கரே...’ என்று உச்சஸ்தாயில் சிவசேனாத் தொண்டன் அடித்தொண்டையில் கத்துவதில் தொடங்குகிறது படம். சிவசேனாவைக் கட்டியெழுப்பிய பால் தாக்கரே வரைந்த கார்ட்டூன்கள் முதல், அவர் வழிநடத்திய கலவரங்கள்வரை காட்சிகள் விறுவிறு சுறுசுறு. ஆனால், கலவரங்களைப் போர்க் காட்சிகளாகவும் அதைத் தூண்டியவரைப் படைத் தளபதியாகக் காட்டியிருப்பது நியாயமாமாரே? வசனங்கள் வெறுப்பரசியலைப் பேசுகின்றன. ‘லுங்கியை உருவிவிட்டு அடிக்கணும்’ வசனம் தமிழர்களை நேரடியாகத் தாக்குகிறது. “ஹிட்லரை ஹீரோவாகக் காட்டுவது எப்படியோ, அதேபோலத்தான் தாக்கரேவை ஹீரோவாகக் காட்டுவதும் ஆபத்து” என்று கொதிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வப் படமாகவே இது திரைக்கு வருகிறது. தயாரித்திருப்பது சிவசேனா எம்.பி அஜித் ராட். கதையும் அவரே எழுதியிருக்கிறார். ஒருகாலத்தில் மராட்டிய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த சிவசேனா, இப்போது அங்கே ஆட்சியில் இல்லை. படத்தை வெளியிட்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு, கட்சியின் கிராஃபை உயர்த்த நினைக்கிறார்கள்!

பி.எம். நரேந்திரமோடி

பயோபிக் படங்களின் பட்டியலில், இதுதான் பயங்கரமான படம். கான்களையும் கபூர்களையும் தூக்கியடிக்க பாலிவுட் பவுன்ஸராக வருகிறது ‘பி.எம். நரேந்திர மோடி’! இயக்கம் ஓமங் குமார். ஏற்கெனவே ‘மேரிகோம்’, ‘சரப்ஜித்’ பயோபிக்குகளை இயக்கிய அனுபவம் கொண்டவர் இவர். ‘மித்ரோன்’ என்று மோடியின் குரலில் மிரட்டப்போகிறவர், விவேக் ஓபராய். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். ஆனால், “இது மோடின்னு சொன்னா, அமித் ஷாகூட நம்பமாட்டாருப்பா” என்று கிண்டலடிக்கிறார்கள் நெட்டிசன்கள். படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, இணையர்களின் அலும்பு தாங்க முடியவில்லை. “எப்படிங்க பாஸ்? ஃபாரீன்லேயே சூட்டிங்கா?” என்று கேட்பது முதல், “ஏழைத்தாயின் மகன் என்று பெயர் வைத்திருக்கலாமே” என்று ஆலோசனை சொல்வதுவரை, செம அலப்பறை. ஆனால், அதுவே படத்துக்கு பப்ளிசிட்டியாகவும் மாறி, #PMNarendraModi ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் டாப் ஸ்பாட்டைப் பிடித்தது. ஏழைத்தாயின் மகன் எப்படி பிரதமரானார் என்கிற ஒன்லைன்தான் கதையாம். ஜனவரி இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்புத் தொடங்குகிறார்கள். 23 மொழிகளில் வெளியாகிறது படம்!

தி அயர்ன் லேடி

பாலிவுட், டோலிவுட் பயோபிக் எடுக்கும்போது, பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா கோலிவுட்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கை சுடச்சுடத் தயாரித்துவருகிறார்கள். அதுவும் ஒன்றல்ல... இரண்டு படங்கள். இரண்டு இயக்குநர்கள். தனித்தனியாக எடுக்கிறார்கள். ஒரு படத்துக்குப் பெயர் ‘தி அயர்ன் லேடி’. புதுமுக இயக்குநர் பிரியதர்ஷனி இயக்குகிறார். ஜெயலலிதாவாக நடிக்கிறார் நித்யா மேனன். ஃபர்ஸ்ட் லுக்கைக்கூட வெளியிட்டுவிட்டனர். இன்னொரு படத்தை, ஏ.எல். விஜய் இயக்குகிறார். கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியிட்டுவிட்டார்கள். நடிகர்களின் தேர்வு நடக்கிறதாம். ஆனால், அடுத்தகட்ட அப்டேட்ஸ் எதுவும் இல்லை. இரண்டு படங்களுமே அம்மாவின் பிறந்தநாளுக்கு வருகிறதாம். ஆனால், ‘தி அயர்ன் லேடி’யில் அம்மாவின் தடாலடிகள், அப்போலோ மர்மங்கள் என்று எக்குத்தப்பாக எதிர்பார்க்க வேண்டாம். ‘அதிகாரபூர்வத் தகவல்களை வைத்து மட்டுமே படத்தை எடுக்கிறோம்’ என்று அறிவித்திருக்கிறது படக்குழு. ஆக, அம்மாவின் வீரவரலாறு காட்சிகளாக விரியப்போகிறது!

ஆக, எலெக்ஷன் வரைக்கும் என்டர்டெய்ன்மென்ட்டுக்குப் பஞ்சம் இல்லை!

என்.டி.ஆர் கதாநாயகடு

ஜனவரி 9-ம் தேதி வெளிவந்த ‘என்.டி.ஆர் கதாநாயகடு’ படம் தெலுங்கு தேசத்தைத் தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கிறது. அப்பா என்.டி.ஆர் கேரக்டரில், பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மகன் பாலய்யா என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணா. அதுவும் அந்த கிருஷ்ணர் வேடம்... ஆஹா... அந்த என்.டி.ஆர் அப்படியே வந்துநிற்கிறார். சந்தேகமே வேண்டாம்... இது பாலய்யாவின் சங்கராந்தி! அவரின் அரசியல் கனவுகளுக்கும் படம் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. பாலய்யாவுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே ஆரம்பக் காலத்திலிருந்தே பதவிச்சண்டை உண்டு. சந்திரபாபு வெளிநாடு சென்றபோது, அவரது நாற்காலியில் அமர்ந்து அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தியவர்தான் பாலய்யா. “யார் யாருக்கோ அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள். என்.டி.ஆரின் மகன் எனக்கு இல்லையா அமைச்சர் பதவி?” என்று வெளிப்படையாகவே வெடித்தவர். ஏற்கெனவே தனது ‘லெஜென்ட்’ படத்தில் ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். ஆனாலும், அமைதியாகவே இருந்தார் நாயுடு. பாலய்யா மீதோ அல்லது ஹரிகிருஷ்ணா மகன் ஜூனியர் என்.டி.ஆரின் மீதோ நாயுடு கைவைத்தால், கட்சிக்குள் கலகங்கள் பிறக்கும் என்பது நாயுடுவுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், ‘என்.டி.ஆர் கதாநாயகடு’ படத்துக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துவிட்டு அமைதியாகிவிட்டார். இன்னொரு பக்கம் ஜெகன்மோகன் ரெட்டியும், ‘ராஜசேகர் ரெட்டி’ என்ற பெயரில், தன் தந்தையின் பயோபிக்கை எடுத்து வருகிறார். மம்முட்டிதான் நாயகன். அதுவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் திரையைத் தொடலாம்.