Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பாலிவுட் இயக்குநர்  கரண் ஜோஹர் தலைமையில் ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், ஆலியா பட், வருண் தவான், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட பதினான்கு பாலிவுட் பிரபலங்கள் சென்றவாரம் பிரதமர் மோடியை சந்தித்துதான் லேட்டஸ்ட் வைரல். நாட்டு முன்னேற்றத்துக்காக, பொழுதுபோக்குத் துறையின் பங்களிப்பு பற்றிய கலந்துரையாடல் நடந்துள்ளது.  பிரபலங்கள் அத்தனை பேரும் மோடியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் ஷேர் செய்ய ‘மரண மாஸ்’ டிரெண்டானது. சந்திப்புக்குப் பிறகு சினிமா டிக்கெட்டின் GST-யைக் குறைத்ததற்காக நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் கரண் பதிவிட்டு லைக்ஸ் அள்ளினார்.செல்ஃபிவித்பி.எம்

ர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் இருவரும் `காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியதுதான், இந்த ஆண்டு கிரிக்கெட் உலகம் எதிர்கொண்ட முதல் சர்ச்சை. அதிலும் பார்ட்டி, செக்ஸ், பெண்கள் குறித்து பாண்டியா அடித்த கமென்ட் எல்லாம் கொடூரம். உடனடியாக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை போர்க்கொடி தூக்கினர். `தனிநபர்களின் இதுபோன்ற கருத்தை அணி ஆதரிக்காது’ என கேப்டன் விராட் கோலியும் தெளிவுபடுத்தினார். பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், ஹாட் ஸ்டாரிலிருந்து அந்த எபிசோடை நீக்கி விட்டது ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம். வாயை மூடிப் பேசவும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

மீபத்தில் AIBA வெளியிட்டுள்ள குத்துச்சண்டைத் தரவரிசைப் பட்டியலில், இந்திய வீராங்கனை மேரி கோம் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். 48 கிலோ எடை பிரிவின் கீழ், 1700 மதிப்பெண் எடுத்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார் கோம். மூன்று குழந்தைகளுக்குத் தாயான கோமின் லட்சியம், 2020-ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில், 51 கிலோ பிரிவில் தங்கம் வெல்வதுதானாம். ரியல் 36 வயதினிலே!

இன்பாக்ஸ்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவைப் புனரமைக்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ். தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து வெள்ளத்தில் வீடிழந்தவர்களுக்கு மீண்டும் வீடுகள் கட்டிக்கொடுக்கிற வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். அவருடைய சேவைக்கு ஹ்ருதிக் ரோஷன், அக்‌ஷய் குமார் என பாலிவுட் முழுக்க செம சப்போர்ட். சேவை நாயகி!

ந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக் கோப்பை வெற்றிக்கதை, பாலிவுட்டில் படமாகவிருக்கிறது. இந்தப்படத்தில் ரன்வீர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரன்வீரின் மனைவி தீபிகா படுகோனேவை நடிக்கவைக்கும் முயற்சிகளில் படக்குழு இறங்க, ‘‘இது ஆண்களுக்கு முக்கியத்துவம் தரும் படம். இதில் நடிக்க விருப்பமில்லை’’ என மறுத்துவிட்டார் தீபிகா. கெத்து கேர்ள்!

மோகன்லால் நடிப்பில் 1994-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிய மலையாளத்திரைப்படம் ‘பவித்ரம்.’ அந்தப்படத்தின் பாதிப்பில் உருவான பாலிவுட் படமான ‘பதாய் ஹோ’ சென்ற ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆக, இப்போது பவித்ரத்தைத் தமிழில் ரீமேக் பண்ணும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். மோகன்லால் நடித்த பாத்திரத்தில் சிவகார்த்திகேயனை நடிக்கவைக்கும் வேலைகளும் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. வர்றார் வர்றார்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism