Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/pu.ko.saravanan

உடைந்துபோயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். தனிமையை நாடி எங்கோ வெறித்துப் பார்க்கும் விழிகளோடு, நினைவுகளிலும், படபடப்பிலும் அவள் தொலைந்திருப்பாள். எல்லாக் குழப்பங் களையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ள முடியாமல், இதயத்தின் துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல், “நான் நல்லாத்தான் இருக்கேன்.” என்பாள். அவள் போராட்டக்குணத்தை இழந்து விடவில்லை, பயனற்ற ஒன்றுக்குப் போராடுவதையே அவள் நிறுத்தி விட்டாள்.

வலைபாயுதே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடைந்துபோயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். எல்லாம் சரியாகிவிடும் என அவளிடம் சொல்லாதீர்கள். அது மாறவே மாறாது என்கிற அளவிற்கு அவள் அதனோடு போராடி ஓய்ந்துவிட்டாள். அதற்கு மாறாக, ஒவ்வொன்றாகச் சரி செய்ய அவளுக்கு உதவுங்கள். இதுவும் கடந்து போகும் என ஆறுதல் சொல்லாமல் கடக்க உதவுங்கள். அவளுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, எனினும், அதைக்குறித்து அவள் வருந்தவில்லை.

உடைந்துபோயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். அவள் உடைந்து போயிருக்கலாம். எனினும், அவள் வலிமையோடு எழுந்து நிற்பாள். கானல் நீராகிப்போன கனவுகள் அவளை வாட்டினாலும் எப்படி வாழ்வது என்றும், இதயம் காயப்பட்டுக் கண்ணீர் வடித்தாலும் எப்படி அன்பு செய்வது என்றும் அவள் கற்பிப்பாள். எப்படி அச்சமில்லாமல் இருப்பது என்று நரகத்துக்குச் சென்று திரும்பிய அவள் கற்பிப்பாள். அவளை அச்சப்படுத்தக் கூடியது எதுவுமில்லை. உங்களுக்கு எப்பொழுதும் கைகொடுக்கும் உங்கள்மீது நீங்கள் வைக்க வேண்டிய நம்பிக்கையை அவள் புலப்படுத்துவாள்.

வலைபாயுதே

உடைந்துபோயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். புதிராகப் பரவசப்படுத்தும் அவளை விடுவிக்க முயன்று மகிழ்ச்சியைச் சுவைப்பீர்கள். எனினும், அவளை உங்களால் எப்பொழுதும் புரிந்துகொள்ள முடியாது. அவளைப் புரிந்துகொள்ள முயலாதீர்கள். அவளுக்கே அவளைப்பற்றிய புரிதல் இல்லாதபொழுது உங்களால் எப்படி அவளைப் புரிந்துகொள்ள முடியும்? தன்னுடைய வாழ்வின் போராட்டங்களை மனதின் பக்கங்களில் எழுதிச் செல்லும் திறந்த புத்தகம் அவள். அவளின் வாழ்வின் இறுதிக்கணம் வரை நீளும் அந்தப் புத்தகத்தை நீங்கள் ஒரு கணமும் வாசிக்காமல் இருக்க முடியாது. அவளின் கொடுங்கனவுகளிலிருந்து பேய்க் கதைகளையும், வலிகளிலிருந்து கவிதைகளையும் அவள் படைப்பாள்.

உடைந்துபோயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். அவளை யாரும் ஏற்றுக்கொள்ளவோ, அன்பு செய்யவோ தேவையில்லை. அவளை யாரும் காப்பாற்றவும் வேண்டியதில்லை. அவளின் நினைவு நரகத்தின் பூதங்களை ஊற்றெடுக்கும் மனதின் குழப்பங்களில் உயிரூட்டி உலவ விடுகிறாள். அந்தப் பூதங்களை விரட்டாதீர்கள். அவை மனிதர்களைப்போல ஆபத்தானவை அல்ல. அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு, அவளின் மனவெளியில் ஒரு நடை போங்கள். அவளின் கலைப்பண்பால் மாற்றப்பட்டுவிட்ட உலகின் மகத்தான இடத்தைக் காண்பீர்கள். அவளின் பிணைந்த நினைவுகள் கொடிகள்போலக் கூடிச்சிரிக்கும், படபடப்பு மரங்கள் அவளின் தலையில் வேர்விட்டிருக்கும், நம்ப முடியாத இடங்களில் நம்பிக்கை மலர்கள் பூத்துக் குலுங்கும். அவளின் நம்பிக்கையின்மை தழைக்கும் மண்ணில் ஆங்காங்கே தன்னம்பிக்கை, அன்பு விதைகள் தூவிக் கிடக்கும். கருணை நதி பாய்ந்து ஓடும். பிரபஞ்சத்தைப்போல அழகும், முடிவற்றதாகவும் அவளின் இதயம் இருப்பதை மேலும் அவளின் மனவெளியின் பரப்பில் நடமாடுகையில் கண்டு பிரமிப்பீர்கள்.

உடைந்துபோயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். அவள் பெரிதாக எதுவும் கேட்க மாட்டாள். எதிர்பார்ப்புகள் பிரிவில் முடியும் என அவள் அறிவாள். அவளைக் காயப்படுத்தி விடுவோமோ என அஞ்ச வேண்டியதில்லை. அவளுக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைத் தெரியாமல் மீற நேரிடுமோ எனக் கவலைகொள்ள வேண்டியதில்லை. வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றே அவள் எதிர்பார்க்க மாட்டாள். மனிதர்கள் வாழ்க்கைக்குள் வருவது விட்டு விலகத்தான் என அறிந்திருப்பதால் அவள் மிக மோசமானவற்றுக்கும் தயாராகவே இருக்கிறாள். இந்தப் பாதையில் அடிக்கடி பயணத்திருப்பதால் அவள் தொலைந்துவிடமாட்டாள்.

வலைபாயுதே

உடைந்துபோயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். உலகம் உங்களுக்கு அளித்த காயங்களை அவள் ஆற்றுவாள். உங்களின் இதயத்தின் உடைந்த துண்டுகளையும், அவளின் இதயத்தின் உடைந்த துண்டுகளையும் இணைத்து ஒரு அழகிய ஓவியத்தை வரைவாள். அது பிகாசோவின் தூரிகையையும் தோற்கடித்து, அவளின் வெற்றிக் குவியலின் மகத்தான நினைவுப் பரிசாகும்.

உடைந்துபோயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். ஒரு நாள் அவள் மீண்டு வருகையில், இதுவரை கண்டிராத அற்புதத்தைக் காண்பீர்கள். கடந்த காலம் கடந்து பீனிக்ஸ்போல எழும் அவள், கதிரவனைப்போல முழுமையான புகழில் ஒளிர்வாள். உலகை நம்பிக்கையோடு எதிர் கொள்வாள். நீங்கள் இருவரும் இணைந்து உலகை மாற்றலாம், குறைந்தபட்சம் ஒரு உடைந்த இதயத்தை மீட்கலாம். 

- பிரமிதா நாயர் எழுதியது - தமிழில் மொழிபெயர்ப்பு பூ.கோ.சரவணன்.

facebook.com/Suresh Kannan

“பேட்ட - பழைய ரஜினியைப் பார்த்த மாதிரியே இருக்கு” என்றார் நண்பர் பரவசமாய்.

“அதுக்கு பழைய ரஜினி படத்தையே பார்த்திருக்கலாமே?” என்றேன். கோபத்துடன் சென்றுவிட்டார்.

facebook.com/Sathya Subramani

 உலகத்திலயே அதிக முத்தம் கொடுத்தவர்னு விஜய்சேதுபதி கின்னஸ்ல இடம் பிடிப்பார். மார்க் மை வேர்ட்ஸ்...

twitter.com/ChPaiyan

விண்டேஜ் ரஜினி, விண்டேஜ் அஜித் எல்லாம் ஓகே. ஆனா மக்களுக்குத் தேவை விண்டேஜ் வடிவேலுதான்.

facebook.com/Karunakaran


அழகு, பணம், திறமைய வச்சு ஒருத்தர் மேல பொறாமைப்படாத அளவுக்கு மனசு பக்குவமாயிருச்சு. ஆனா இந்த அரைப்பரீட்ச லீவு, பொங்கல், தீபாவளிக்கெல்லாம் குடும்பத்தோட சந்தோசமா சொந்த ஊருக்குப் போறவங்கள பாத்தாதான் கொஞ்சம் காண்டாகுது. நல்லாருங்கடா டேய்!

facebook.com/Priyatharshini

நாம ஷாப்பிங் பண்ணும்போது எதாவது சந்தேகம் வந்து அவசரமா ஊட்டுக்காருக்கு போன் அடிச்சோம்னா அப்பதான் அட்டண்ட் பண்ணவே மாட்டாங்க.அப்ப நாம கொஞ்சமும் யோசிக்காம அவங்ககிட்ட ஆட்டைய போட்டுட்டு வந்திருக்க டெபிட் கார்டை பெரிய அமௌன்ட்டுக்கு தேச்சி ரணும். அலறி அடிச்சு அவங்களே நமக்கு போன் பண்ணுவாங்க! #ராசதந்திரங்கள்

facebook.com/vimaladhitha.maamallan 

புக்ஃபேர்ல கூட்டமே இல்லையே ‬புக்குக்குனு இந்த மாச பட்ஜெட்ல ஒதுக்கின பணத்துல எல்லாரும் பேட்ட, விஸ்வாசத்துக்குக் குடும்பத்தோட புக் பண்ணி செலவழிச்சிட்டிருப்பாங்க. ‬‪தீவிரமா புக்கு படிக்கிறவன் பேட்ட, விஸ்வாசத்தை புக்பண்ணிவேற பாக்கறானா, ‬‪சினிமா விமர்சனம் எழுதாம பேஸ்புக்ல இருக்கமுடியாதே‬.

facebook.com/Paadhasaari Vishwanathan

பேத்தி பேசிய முதலாவது முழு நீள வாக்கியத்தை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டு சொல்லும் தாத்தாக்களுக்கு ஆயுளில் சில ஆண்டுகள் கூடக் கூடும்.

twitter.com/d_oncorleone

சீமானுக்குப் பையன் பிறந்திருக் கானாம், மகிழ்ச்சி... வாழ்த்துகள்! இனி அந்தக் கதைகள் எல்லாம் அந்தக் குழந்தையோடு நிறுத்திக்கணும்.
 
twitter.com/Baashhu

தீபாம்மா `மாதவனுக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி’, கட்சியே ஆரம்பிக்காத `ரஜினிகூட கூட்டணி இல்லை’ன்னு சரத்குமார். #இப்பதான் அரசியல் களம் சூடுபிடிக்கிது.

twitter.com/amuduarattai


நூடுல்ஸ், பாஸ்தா போன்றவை சிறிய மளிகைக் கடைகளில்கூடக் கிடைத்து விடுகிறது. கேழ்வரகு, தினை, சாமை, கம்பு போன்றவற்றைத் தான், தேடித் தேடி அலைய வேண்டி இருக்கிறது.

twitter.com/lakschumi


வீடு வரை துணைக்கு வரும் நிலவை வாசலுக்கு வெளியே  நிறுத்திவிட்டுக் கதவடைக்கும் கருணையை என்னவென்று சொல்வது.

twitter.com/mymindvoice


பெருஞ்சாபம் எதுவெனில்... கடந்து போனதும் நினைவிலிருக்குமென்பது.

twitter.com/Thaadikkaran

பண்டிகை வந்ததற்கான அடையாளத்தை விட்டுச் செல்கிறது ‘கடன்கள்.’

twitter.com/Numinous_2


நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்றலாமான்னு தோணும். காபி குடிக்கலாம்னும் தோணும். காபி வின்ஸ்.

சைபர் ஸ்பைடர்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism