ஆனந்த் மகாதேவன் திடீர் விலகல்! இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன் | madhavan turns as director

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (21/01/2019)

கடைசி தொடர்பு:19:30 (21/01/2019)

ஆனந்த் மகாதேவன் திடீர் விலகல்! இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் மாதவன்

திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த முக்கியமான விஞ்ஞானி நம்பி நாராயணன். இவரின் வாழ்க்கையை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' என்ற பெயரில் படமாக எடுக்க இருக்கிறார்கள். இதை ஆனந்த் மகாதேவன் இயக்க நம்பி நாராயணன் வேடத்தில் தான் நடிக்கவுள்ளதாக 2018 அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவாக பதிவிட்டிருந்தார், மாதவன்.

மாதவன்

இதைத் தொடர்ந்து, மாதவன் இணை இயக்குநராகவும் பணியாற்ற இருக்கிறார் என்ற செய்தியும் வந்தது. ஆனால், வெவ்வேறு கமிட்மென்ட்டுகள் காரணமாக ஆனந்த் மகாதேவன் படத்திலிருந்து விலகியுள்ளார். அதனால், மாதவனே இயக்குநர் அவதாரம் எடுத்து முழுப் படத்தையும் இயக்கவிருக்கிறார். 'பார்த்தாலே பரவசம்', 'கண்ணத்தில் முத்தமிட்டால்' ஆகிய படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தில் மாதவனோடு சிம்ரன் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் க்ளாப் போர்டில் 'இயக்குநர் - மாதவன்' என்று இருப்பதை  போட்டோ எடுத்து தனது இன்ஸ்டராகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தை இந்தியா மட்டுமல்லாது ஃப்ரான்ஸ், ரஷ்யா, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் எடுக்க உள்ளனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க