தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் - அசுரனுக்குப்பிறகு மீண்டும் ஷூட்டிங்! | Dhanush directorial movie will be resuming soon

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (21/01/2019)

கடைசி தொடர்பு:21:30 (21/01/2019)

தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் - அசுரனுக்குப்பிறகு மீண்டும் ஷூட்டிங்!

`அசுரன்' கதாபாத்திரத்துக்காக தனது லுக்கை மாற்றியுள்ளார் நடிகர் தனுஷ். அவர் `மாரி 2' படம் வெளியானபோதே தனது அடுத்த படமான `அசுரன்' அறிவிப்பை வெளியிட்டார். வெற்றிமாறன் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில நாள்களில் தொடங்கவிருக்கிறது.

அசுரன்

இதனிடையில் தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம், சென்ற வருடம் டிசம்பர் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்ததுபோல், தனுஷ் படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்து இயக்கி வருகிறார். நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, நாகர்ஜுனா, சரத்குமார், ஶ்ரீகாந்த், அதிதி ராவ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.  ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

தனுஷ்

இப்படத்தின் முதல் பாதிக்கான படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்தது. இந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு அனைத்து முக்கிய நடிகர்களின் கால்ஷீட்டையும் பெற தாமதம் ஆகி வருகிறது. இந்தக் கால இடைவெளியில் அசுரனை முடித்துவிடலாம் என்று தனுஷ் அசுரன் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார். 

சமீபத்தில் ஆங்கில தினசரிக்கு அளித்தப் பேட்டியில் நாகர்ஜுனா, ``தனுஷ் இயக்கும் படம் 600 வருடங்களுக்கு முன்னால் நடக்கும் கதைக்களத்தையுடையது. முந்தைய படங்களில் நடித்திராத கதாபாத்திரம் என்பதால், எனக்கு அப்படத்தில் நடிப்பது மிகவும் ஆர்வமாய் இருக்கிறது." என்று கூறியுள்ளார்.

நாகர்ஜுனா | எஸ்.ஜே.சூர்யா |அதிதி ராவ்

இது வரலாற்றுப் படம் என்பதினாலும் படத்தை எடுக்கக் கால அவகாசம் பிடிக்கலாம் எனவும் சினிமா வட்டாரம் தெரிவிக்கின்றது.