தனுஷின் `ரௌடி பேபி'யைப் பாராட்டி கன்னட ரசிகர்களிடம் சிக்கிய திவ்யா ஸ்பந்தனா! | Divya Spandana's tweet about Rowdy baby song goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (22/01/2019)

கடைசி தொடர்பு:16:05 (22/01/2019)

தனுஷின் `ரௌடி பேபி'யைப் பாராட்டி கன்னட ரசிகர்களிடம் சிக்கிய திவ்யா ஸ்பந்தனா!

கன்னடம் மற்றும் தமிழ் நடிகையான திவ்யா ஸ்பந்தனா `ரௌடி பேபி’ பாடலின் லிங்கை ஷேர் செய்து, யுவனையும் தனுஷையும் பாராட்டி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து கன்னட சினிமா ரசிகர்கள் இவரைத் திட்டி ரிப்ளை செய்து வருகின்றனர். 

திவ்யா ஸ்பந்தனா

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம், `மாரி 2.’ இந்தப் படத்தில் இடம்பெற்ற `ரௌடி பேபி’ பாடல் தெறி ஹிட் அடித்து தற்போது யூடியூபில் 110 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதைப் பாராட்டும் வகையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். `குத்து’, `கிரி’, `வாரணம் ஆயிரம்’ போன்ற படங்களில் நடித்த இவர், தனுஷோடு சேர்ந்து `பொல்லாதவன்’ படத்திலும் நடித்திருகிறார்.

திவ்யா


இந்தக் காரணத்தால் யுவன் ஷங்கர் ராஜாவையும் தனுஷையும் பாராட்டி ட்வீட் பதிவிட்டிருந்தார். சமீபத்தில் யாஷ் நடித்த `கே.ஜி.எஃப்’ படம் கன்னடத்தில் சக்கைபோடு போட்டு வசூலை அள்ளியது. `தமிழ்ப் பாடலைப் பாராட்டத் தெரிந்த உங்களுக்கு, ஏன் `கே.ஜி.எஃப்’ படத்தைப் பாராட்ட மனம் வரவில்லை’ என்பதுபோல் திட்டி வருகின்றனர் கன்னட சினிமா ரசிகர்கள்.

ரௌடி பேபி பாடல்

காங்கிரஸின் உறுப்பினரான இவர், தற்போது கட்சியின் சமூக வலைதலங்கள் மற்றும் டிஜிட்டலின் தலைவராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இதை வைத்து, `இனிமேல் தமிழர்களையே வாக்களிக்கச் சொல்லுங்கள், ஓட்டு கேட்டு எங்களிடம் வர வேண்டும்’ என்றும் கலாய்த்து வருகின்றனர். கடந்த 20-ம் தேதி பதிவிட்டிருந்த இவரது ட்வீட்டை இன்னும் ரீ-ட்வீட் செய்து விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர்.