தனுஷ்- வெற்றிமாறன் படத்தில் மலையாள லேடி சூப்பர் ஸ்டார்! | manju warrier pairs up with dhanush

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (22/01/2019)

கடைசி தொடர்பு:15:50 (22/01/2019)

தனுஷ்- வெற்றிமாறன் படத்தில் மலையாள லேடி சூப்பர் ஸ்டார்!

`வடசென்னை' படத்தைத் தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் இணையும் திரைப்படம் `அசுரன்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தனுஷ் தனது கெட் அப்பை மாற்றியுள்ளார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாணு தயாரிக்கிறார். இப்படத்துக்கான படப்பிடிப்பு ஜனவரி 26-ம் தேதி தொடங்கும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

தனுஷ்

படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே தனுஷுக்கு ஜோடி யாரென்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. `அசுரன்' படத்தில் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகையாகக் கருதப்படும் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிப்பார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மஞ்சு வாரியர் மூத்த நடிகை என்பதால் அவர் தனுஷுக்கு ஜோடியாக இருப்பாரா என்ற சந்தேகமும் உள்ளது. வடசென்னை இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என அறிவித்திருந்தினர். அதற்கு முன்னர் இப்படம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.