இந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்! | Akshay kumar committed in kanchana hindi remake

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (22/01/2019)

கடைசி தொடர்பு:19:30 (22/01/2019)

இந்தி ரீமேக் `காஞ்சனா’வில் நடிக்கிறார் அக்‌ஷய்குமார்!

அக்‌ஷய்குமார்; லாரன்ஸ், காஞ்சனா

`பேய்’ படத்தில் காமெடி பண்ணலாம் என்ற ஜானரை பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கி வைத்தவர், ராகவா லாரன்ஸ். `முனி’ படத்தின் மூலம் இந்த யுக்தியைத் தொடங்கிய லாரன்ஸ், அந்தப் படத்துக்குப் பிறகு, `காஞ்சனா’ படத்தையும் அதே பாணியில் உருவாக்கினார். அதுவும் அதிரி புதிரி ஹிட்; அதன் பிறகு `காஞ்சனா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார்; தற்போது `காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகத்தைப் பரபரப்பாக இயக்கி வருகிறார். தமிழில் ஹிட்டான `காஞ்சனா’ படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் லாரன்ஸ். இதில் ராகவா லாரன்ஸ் நடித்த கேரக்டரில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கும் ஒரு பிரபலமான நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. 

இதுவரை தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களை இயக்கியிருக்கும் லாரன்ஸ், இந்தப் படம் மூலம் தனது பாலிவுட் பயணத்தைத் தொடங்கவுள்ளார். தற்போது லாரன்ஸ் இயக்கிவரும் `காஞ்சனா’ படத்தின் மூன்றாவது பாகத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்துவிட்டு, இந்தி `காஞ்சனா’வின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளாராம்.