`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்!' - கீர்த்திகா | Kanaa movie child artist keerthika speaks about her upcoming movies

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (22/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (22/01/2019)

`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்!' - கீர்த்திகா

`கனா படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட நடிக்கப் போறேன்!' - கீர்த்திகா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியப் படம் ’கனா’. நடிகர், பாடலாசிரியர், பாடகர் என த்ரீ இன் ஒன் கலைஞராக இருந்த அருண்ராஜா, இயக்குநராக தான் அறிமுகமான முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருந்தார். இந்திய சினிமாவில் மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படமான இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷின் சின்ன வயது கதாபாத்திரத்துக்கு மோனிகா மற்றும் கீர்த்திகா என இரு குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். மோனிகா ஏற்கெனவே `பைரவா’, `சங்கு சக்கரம்’, `ராட்சசன்’ என பல படங்களில் நடித்திருக்கிறார்; கீர்த்திகாவுக்கு இது முதல் தமிழ்ப்படம். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார், கீர்த்திகா.

கனா

இதுகுறித்து கீர்த்திகாவிடம் கேட்டபோது,`எனக்கு கிரிக்கெட் விளையாடவே தெரியாது. `கனா’ படத்துக்காக அதை கத்துக்கிட்டு நடிச்சேன். படம் பார்த்துட்டு நிறைய பேர் என்னை பாராட்டுனாங்க. அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கிறதுக்கும் வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. ’பேட்ட’ படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிச்சிருந்தேன். இப்போ மகேஷ்பாபு சாரோடு ஒரு தெலுங்கு படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். இந்தப் படத்தோட ஷூட்டிங் பொள்ளாச்சியில போயிட்டு இருக்கு. இந்தப் படத்துக்கு அப்பறம் நயன்தாரா அக்காக்கூட ஒரு படத்தில் நடிக்கிறேன். தனுஷ் சாரோடு ஒரு படத்தில் நடிக்கப்போறேன். இன்னும் சில படங்கள் பேசிட்டு இருக்காங்க’’ என உற்சாகமாகக் கூறினார்.