வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் சீரியல் வீடியோ! | vijay devarakonda's childhood video goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (23/01/2019)

கடைசி தொடர்பு:16:10 (23/01/2019)

வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் சீரியல் வீடியோ!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் சிறு வயது வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

vijay devarakonda

`அர்ஜுன் ரெட்டி' படம்மூலம் தெலுங்குப் பட உலகம் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகைத் தன்வசம் ஈர்த்துக்கொண்டவர், விஜய் தேவரகொண்டா. 'நோட்டா'  படம் மூலம் தமிழ்ப் படங்களிலும் நேரடியாக நடிக்கத் தொடங்கியுள்ளார். பேச்சு, நடை, பழகும் விதம் எனத் தன் 'டோன்ட் கேர் ஆட்டிட்யூட்' மூலம் அனைவரையும் கவர்ந்த இவர், நோட்டா படம் வெற்றி பெறாததுக்கு கதாநாயகனான தானே காரணம் என்று கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது, அவர் சிறு வயதில் சீரியல் ஒன்றில் நடித்திருக்கும் காட்சியை அவரின் ரசிகர் ஒருவர் வெளியிட ஆச்சர்யத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா

`ஷ்ரிடி சாய் பர்தி சாய் திவ்ய கதா' என்ற அந்த தெலுங்கு நாடகத்தில் சௌகார் ஜானகியுடன் நடித்திருக்கிறார். விஜய் தேவரகொண்டாவின் தந்தை கோவர்த்தன ராவ், தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.