பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

facebook.com/dextermorgan9192

”இந்த intellectual, intellectualன்னு சொல்றாங்கள்ல.. அப்டின்னா யாரு ப்ரோ?”

”ப்ளாக் & வொயிட்ல டிபி வச்சிருப்பாங்க ப்ரோ”

வலைபாயுதே

facebook.com/thepayon

சாமிக்கு விளக்கேற்றுவது ஏன் தெரியுமா? இருள் இருக்கும் இடத்தில்தான் ஒளி தேவை.

facebook.com/theo.atheist

ஆம்லெட்டின் சுவை என்பது கடைக்குக் கடை, அந்தக் கடையிலிருக்கும் பரோட்டாக் கல்லை சுத்தம் செய்த ஆண்டை பொறுத்து மாறுபடும்...

facebook.com/karthekarna

தேங்காயை இரண்டே அடியில் சரிசமமாக உடைப்பதை எல்லாம் வீரம் என்று நம்பும்வரை பெண்களை ஈசியாக ஏமாற்றலாம்.

facebook.com/kumar.nithish.148

Fan: நடிகன் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதராக நின்றுவிட்டார் சேதுபதி....

Troller: டேய் இப்டி பேசியே காலி பண்ணிராதீங்கடா நல்ல மனுஷன்டா அந்தாளு...

facebook.com/raja.paramasivam.315

முத்தம் கொடுக்கிறதுல கமலை விஜய்சேதுபதி ஓரம் கட்டிருவாப்லபோல.

twitter.com/gips_twitz

அநேகமா சீமானோட மக்களவைத் தேர்தல் வாக்குறுதி, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்  தருவோம்ங்கிறதா தான் இருக்கும்

வலைபாயுதே

twitter.com/Thaadikkaran

“அமைதிப் பூங்காவாக திகழ்கிறது தமிழகம்” - முதலமைச்சர் பழனிசாமி# அப்போ நாளைக்கு ஒரு கொலை கேஸோ இல்ல கொள்ளை கேஸோ வரப்போகுது!

facebook.com/thepayon


இனிமேல் குழந்தைகளுக்காக எழுதலாம் என்று இருக்கிறேன். அவர்களால்தான் ஒன்றும் கண்டு பிடிக்க முடியாது.

twitter.com/shivaas_twitz


ஆபீஸ்ல ஹெச்.ஆர். திடீர்னு கல்யாண நாள், மனைவியின் பிறந்த நாள் என்னன்னு கேக்குறாங்க... கூகிள்லயும் தேட முடியாது, வீட்டுக்கு போன் பண்ணியும் கேட்கமுடியாது... கையறு நிலை..!

twitter.com/MJ_twets

கண்ணீர் மட்டும் கலரா இருந்துச்சுன்னா இந்த உலகமே கலர்ஃபுல்லா இருக்கும்!

வலைபாயுதே

twitter.com/bommaiya

கசடதபற - வல்லினம் ஙஞணநமன - மெல்லினம் யரலவழள - இடையினம் வாழாமாழ்ப்ள - டாஸ்மாக்கினம்

twitter.com/mohanramko


ஷாப்பிங் பண்ணும்போது, மனைவி ஒவ்வொரு பொருளாய்க் கையில் எடுத்து பார்த்து வைத்து விடும்போது, சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்க்கும் அனுபவம் கணவனுக்கு மட்டுமே.

twitter.com/shivaas_twitz

உலகின் மிக சுகமான தலையணை... அன்னைமடி... எவன் சொன்னான்..? பஸ்ல பக்கத்து சீட்ல உட்காந்து இருக்கறவன் தோள்ல சாய்ஞ்சி தூங்கியிருக்கியா..?!

சைபர் ஸ்பைடர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு